உயிருக்கு போராடறாங்களாம்... வதந்திக்கு பதிலடி கொடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியெல்லா

சுந்தரி சீரியல் நடிகை

யூடியூப்பில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுந்தரி டிவி சீரியல் நடிகை கேப்ரியெல்லா..

  • Share this:
சன் டிவியில் பிரைம் டைமில் (இரவு 9 - 9.30) ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் சுந்தரி. கருப்பாக இருக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் வாழ்க்கை மற்றும் அந்த பெண் தனது தோல் நிறம் மற்றும் அவரது பாரம்பரிய தோற்றத்திற்கு எதிராக வரும் கேலி, கிண்டல் மற்றும் அவமானங்களுக்கு திராக எப்படி போராடுகிறாள் சமூகத்தில் எப்படி எல்லாம் போராடி முன்னேறுகிறாள் என்பதை கதைக்களமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கிய குறுகிய காலத்திலேயே ரசிகர்களை கவர்ந்தது.

பல்வேறு சுவாரசிய திருப்பங்களுடன் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது சுந்தரி சீரியல். இதில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரியெல்லா செல்லஸ் . தனது நடிப்பு திறமை மூலம் ஏராளமான Followers-களை கொண்டிருந்த கேப்ரியெல்லா செல்லஸ், டிக்டாக் பிரபலமாக திகழ்ந்தார். பின் நயன்தாரா நடித்த ஐரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். இதனை அடுத்து கேப்ரியெல்லா செல்லஸுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியது.

இந்நிலையில் தான் சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரின் கதாநாயகியாக இவர் தேர்வு செய்யப்பட்டார். சுந்தரி கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அற்புதமாக நடித்தும் வருகிறார். தவிர லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள வரவிருக்கும் க்ரைம்-த்ரில்லர் திரைப்படமான N4-ல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

திரைத்துறையில் சாதிக்க பெண்களுக்கு நிறம் ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்து இவர் கம்மிட் ஆகும் ப்ராஜக்ட்டுகள் நிரூபிக்கின்றன. ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக்கில் உருவான ஆல்பம் ஒன்றிலும் கேப்ரியெல்லா இடம்பெற்றுள்ளார். அப்போது ரஹ்மானுடன் இணைந்து இவர் எடுத்து கொண்ட செல்ஃபீ சமீபத்தில் வைரலானது.

பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சீரியல் நடிகை கேப்ரியெல்லாவும் கோவிட்-19 தொற்றால் சில நாட்களுக்கு முன் பாதிக்கப்பட்டார். இதனை இன்ஸ்டாவில் தெரிவித்த அவர், "யாரும் அசால்ட்டாக இருக்காதீங்க. வெளியே போகும் போது காட்டாயம் மாஸ்க் போடுங்க. எனக்கு கோவிட் கன்ஃபார்ம் ஆயிடிச்சு"என்று கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட அவர் படிப்படியாக பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார்.
ஆனால் வியூஸ்களை மட்டுமே பிரதானமாக கொண்டு செயல்பட்டு வரும் சிலர், யூடியூப் வீடியோக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேப்ரியெல்லா உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போரடி வருவதாகவும், இதன் காரணமாக சுந்தரி சீரியலே ஸ்டாப் ஆக போவதாகவும் புரளி வீடியோவை உலவ விட்டுள்ளனர். இதனால் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவை பார்த்து கடுப்பான நடிகை, தனது இன்ஸ்டாவில் இந்த வீடியோ குறித்து ஷேர் செய்து, நான் நல்லா தான் இருக்கேன். டைட்டிலை பாரு உயிருக்கு போராடறாங்களாம். ஐம் குட் உடம்பு சரி ஆகிட்டு இருக்கு” என்று உடல்நலம் குறித்து அவதூறு பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: