ரோஜா சீரியலில் ஒரே நேரத்தில் இவ்வளவு டிவிஸ்ட்டா?

ரோஜா சீரியல்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் பல ட்விஸ்ட்கள் உள்ள இந்த வார ப்ரோமோ வெளியாகிவுள்ளது.

  • Share this:
சமீபத்தில் அதிகபட்ச ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்துக்கொண்டிருப்பதில், ரோஜா சீரியல் முக்கிய இடம் வகிக்கிறது. சமீபத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த மற்றும் எதிர்பாராத பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் அடுத்தடுத்த எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு டிவிஸ்ட்டா என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் பரபரப்பான திருப்பத்தோடு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில், கூடுதலான அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற இருக்கிறது. இந்த வாரம் வெளியிடப்பட்ட ப்ரோமோவில், ஏகப்பட்ட திருப்பங்கள் காட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பில் ப்ரோமோ வைரலாகி வருகிறது. ரோஜாவை பாதுகாப்பாக வைத்திருக்க, அர்ஜுன் அனுவைக் கடத்துகிறார். கடத்தப்படும் போது, அனு சுயநினைவின்றி இருக்கிறார்.

Also Read : லெஜென்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு

மேலும், அதே நிலையிலேயே ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதே நிலையில் அப்படியே இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கோம் போதே, அவருக்கு சுயநினைவு திரும்புகிறது. அது மட்டுமின்றி, அங்கிருக்கும் ஆட்களை ஏமாற்றிவிட்டு, தப்பிச்சென்று விடுகிறார் அனு. அனு தப்பிச்செல்வது மிகப்பெரிய திருப்பம். ஏனென்றால், ரோஜாவுக்கு அனுவால் எந்த விதமான ஆபத்தும் நேரிடலாம்.இதற்கிடையே, ரோஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அழிப்பது போலவும், பின்னர் அர்ஜுன் ரோஜாவைப் பார்த்துக்கொள்வது போலவும் காட்சிகள் இருந்தன. மேலும், தப்பிச்செல்லும் அனு மீது ஒரு கார் மோத இருந்தது. அவரை, விபத்தில் இருந்து செண்பகம் காப்பாற்றி விடுகிறார். ஆனால், செண்பகத்தை அடையாளம் கண்டுகொண்ட அனு, உடனே அங்கிருந்து தப்பி விடுகிறார். மேலும், செண்பகம் அனுவை அடையாளம் கண்டு கொண்டாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

Photos :இன்ஸ்டாவில் அசத்தும் ப்ரியா பவானி சங்கர் போட்டோஸ்கூடுதலாக, செண்பகம் சாக்ஷியைப் பிடித்து வைத்து, தான் யார் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் ப்ரோமோவில் உள்ளது. இவை அனைத்துமே மிகவும் பரபரப்பாக, திருப்பங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன. அதே போல, ஏகப்பட்ட கேள்விகளும் எழுந்துள்ளன. ரோஜாவுக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது அல்லது யாரால் ஏற்பட்டது.

Photos : நம்ம கண்ணம்மாவா இது.. மார்டன் உடையில் அசத்தும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைதப்பிச் சென்ற அனு, எங்கே சென்றார், யாரிடம் அடைக்கலம் தேடுவார்? கூடுதலாக அனுவால் ரோஜாவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? அனுவை செண்பகம் அடையாளம் கண்டுகொண்டாரா? சாக்ஷி செண்பகத்துக்கு, அவரைப் பற்றிய உண்மையைக் கூறனாரா இல்லையா? இப்படி பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாத ரோஜா ப்ரோமோ, ரோஜா சீரியலின் பிரத்யேகமான ரசிகர்களுக்கு பிரத்யேகமான விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த வாரம் வெளியான ரோஜா சீரியலின் ப்ரோமோ இங்கே:

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: