Roja: மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து ஃபோட்டோ ஷேர் செய்த ரோஜா சீரியல் ஹீரோயின்!

ரோஜா சீரியல்

கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் பல்வேறு பிரபலங்கள் மருத்துவர்களின் உன்னதமான சேவையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
கொரோனா பேரிடர் உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் நாம் அனைவரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறைக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒரு நாட்டின் நெருக்கடி நேரங்களில் மட்டுமல்ல வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிப்பது மருத்துவத்துறை. இதுவரை இல்லாத அளவு கண்ணனுக்கு தெரியாத வைரஸ் கிருமியுடன் நேரடியாக போராடி கொண்டிருக்கின்றனர் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள். இதனிடையே நேற்று இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக கொரோனாவிற்கு எதிரான போரில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்களப்பணியாளர்களாக களத்தில் நின்று போராடி வரும் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.

கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் பல்வேறு பிரபலங்கள் மருத்துவர்களின் உன்னதமான சேவையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சன் டிவியில் ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. காதல், பொழுதுபோக்கு, காமெடி, ரொமென்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த சீரியல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சீரியலில் ஹீரோயினான பிரியங்கா நல்காரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஆந்திராவின் விசாகபட்டினத்தில் பிறந்தவர். ஆந்திராவிலேயே பிறந்து வளர்ந்த இவர் அம்மாநிலத்திலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தொடர்ந்து டோலிவுட்டில் 2010-ம் ஆண்டு பிரபல டைரக்டர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளிவந்த ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் நடிகை பிரியங்கா நல்காரி அறிமுகம் செய்யப்பட்டார்.

Also read... Arjun Sarja: நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்!

இந்த இடத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா. இது தான் இவர் அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படம். அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நிலையில், ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய 2 சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை பிரியங்கா நல்காரி. தொடர்ந்து தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் திவ்யஸ்ரீ என்ற கேரக்டரில் நடித்தார். ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் நடித்தார்.



எனினும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தான் தமிழ் ரசிகர்கள் மதிதியில் இவருக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. நேற்று நாடு முழுவதும் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், மருத்துவர்களின் சேவையை பாராட்டி அவர்களின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி கொண்டு இரு கைகளை கூப்பி நன்றி தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார் நடிகை பிரியங்கா.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: