இந்தியில் ரீமேக்காகும் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் - ரசிகர்கள் குஷி

ரோஜா சீரியல்

சன்டீவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியலான ‘ரோஜா’ சீரியல் ஹிந்தியில் ரீ மேக் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

  • Share this:
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியாக இருக்கும் சன் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரோஜா சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ஆயிரமாவது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் லீட் ரோலில் சிபுசூரியன் நடிக்கிறார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் பிறந்து வளர்ந்த சிபு சூரியன், கன்னட சீரியலான ‘ராதா ரமணா’வில் அறிமுகமானார்.

அவருக்கு ஜோடியாக ’பிரியங்கா நல்காரி’ நடிக்கிறார். இவர்களுடன் வெள்ளித்திரையில் கோலோச்சிய வடிவுக்கரசி, லதா சேதுபதி, ராஜேஷ் உள்ளிட்டோர் நடிகின்றனர். வில்லியாக நடித்து வந்த ஷாமிலி சுகுமார் அண்மையில் அந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சன் டீவியில் வி.ஜேவாக இருந்த அக்ஷையா அறிமுகத் தொடரில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஷாமிலியின் நடிப்பு மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஹீரோ, ஹீரோயின் நடிப்புக்கு நிகராக தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை ஈர்த்த அவர், தாய்மை அடைந்ததால் தொடரில் இருந்து விலகியதாக விளக்கம் அளித்தார். புதிய வில்லியாக களமிறங்கியுள்ள அக்ஷையாவும், தனக்கும் அதே ரசிகர் பட்டாளம் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளார். முதல் எபிசோட் ஒளிபரப்பானவுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்ட அக்ஷையா, தனக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கு தேவையான முழு நடிப்பையும், திறமையும் கொடுப்பேன் எனக் கூறியுள்ள அவர், கதாப்பாத்திரம் சிறந்து விளங்க உங்களின் ஆசியும் அன்பும் தேவை எனக் கேட்டுள்ளார். மேலும், ரோஜா சீரியலில் தான் நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கு ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் அக்ஷையா தெரிவித்திருந்தார்.

Photos : வெள்ளை நிற கவுனில் தேவதை போல் இருக்கும் நடிகை ஜெனிலியா..

அண்மையில், வெளியான டி.ஆர்.பி ரேட்டிங்கில் ரோஜா சீரியல் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வரும் காலங்களில் பல்வேறு திருப்பங்களும், டிவிஸ்டுகளும் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கேற்ப, கடந்த இரண்டு நாட்களாக கதை திருப்பங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழில் வெற்றிகரமான தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’ரோஜா’ சீரியல் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Photos :  நடிகை ராய் லட்சுமியின் ஹாட் பிகினி போட்டோஸ்..

ஏற்கனவே விஜய் டீவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் மொழிபெயர்க்கப்பட்டும், ரீமேக் செய்யப்பட்டும் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தமிழ் சீரியல் ஒன்று இந்தியில் ரீமேக் செய்யப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: