• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ரோஜா சீரியலில் இருந்து விலகியது ஏன்? வில்லியாக நடிக்கும் அனு ஓபன்டாக்

ரோஜா சீரியலில் இருந்து விலகியது ஏன்? வில்லியாக நடிக்கும் அனு ஓபன்டாக்

ஷாமிலி சுகுமார்

ஷாமிலி சுகுமார்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த ரோஜா சீரியலில் வில்லியாக நடித்த அனு அந்த சீரியிலில் இருந்து விலகி உள்ளார்.

 • Share this:
  தமிழ் தொலைக்காட்சிகளிலேயே சன் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக, ரோஜா சீரியல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. விறுவிறுப்பாக செல்லும் கதைக்களம், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் சீரியலின் ரேட்டிங் தாறுமாறாக உள்ளது. கதாநாயகனாக சிபு சூரியனும், அவருக்கு ஜோடியாக பிரியங்காவும் நடித்து வருகின்றனர். சீரியலைப் பொறுத்தவரை ஹீரோவை விட வில்லிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும். அவர்களை சுற்றியே கதைக்களம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால், வில்லியின் வில்லத்தனங்கள் பரபரப்பைக் கூட்டும்.

  அந்தவகையில், ரோஜா சீரியலில் அனு என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் வில்லியாக ஷாமிலி சுகுமார் மிரட்டி வருகிறார். சீரியல் ஹிட்டானதிலும் அனுவின் வில்லத்தனம் முக்கிய காரணம். நெகடிவ் ரோலுக்கு ஏற்ப கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி, உண்மையான வில்லியாகவே பார்க்கப்பட்டு வருகிறார்.

  Also Read : வெளியுலகிற்கு மகனை அறிமுகப்படுத்திய ஷ்ரேயா கோஷல்!

  இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கினாலும், அவருக்கான கதாப்பாத்திரத்தில் முத்திரை பதித்துவிட்டார். வில்லியாக அவர் வரக்கூடிய பிரேம்கள் ஒவ்வொன்றிலும் நடிப்பை தெறிக்கவிடுகிறார். சன் தொலைக்காட்சியின் குடும்ப விழாவிலும் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். அண்மையில் கணவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை கொடுத்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ஷாமிலி சுகுமார், அந்த சுவாரஸ்யத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதாவது, அன்னையர் தினத்தன்று கடைக்கு சென்று பேப்பர் ஒன்றை வாங்கி வந்த ஷாமிலி, அதில் தான் கர்ப்பமாக இருப்பதை எழுதி வைத்திருந்து கணவரிடம் காட்டியுள்ளார்.

  Also Read :  எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. கடந்து வந்துவிட்டேன் - நடிகை சோனா

  இதனைப் பார்த்த அவருடைய கணவர் இன்பவெள்ளத்தில் ஷாமிலியை வாழ்த்தினார். சீரியலில் வில்லியாக இருந்தாலும், நிஜத்தில் கியூட்டாக இருக்கும் ஷாமிலிக்கு அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதேநேரத்தில் அவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா? அல்லது சிறிது காலத்துக்கு பிரேக் விடுவாரா? என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்திருந்தது.  ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே, அந்த சோகமான செய்தியை வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருப்பதால் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதாலும், கர்ப்பமாக இருப்பதால் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாமல் இருப்பதாலும், விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகும் எனத் தெரிவித்துள்ள ஷாமிலி, குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சீரியலில் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ரோஜா சீரியல் மட்டுமல்லாது வாணி ராணி, பாசமலர், பொன்னூஞ்சல் மற்றும் வள்ளி மாப்பிள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் நடித்த ஜீவா திரைப்படத்திலும் ஷாமிலி நடித்திருந்தார்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: