Home /News /entertainment /

தீவிர ரசிகைக்காக ரோஜா சீரியல் அர்ஜுன் செய்த நெகிழ வைக்கும் செயல் - வைரல் வீடியோ.!

தீவிர ரசிகைக்காக ரோஜா சீரியல் அர்ஜுன் செய்த நெகிழ வைக்கும் செயல் - வைரல் வீடியோ.!

Sibbu Suryan

Sibbu Suryan

Roja Serial | தமிழ் டிவி சேனல்கள் தினமும் ஏராளமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை டெலிகாஸ்ட் செய்தாலும், சின்னத்திரை ரசிகர்களின் அமோக ஆதரவு எப்போதும் சீரியல்களுக்கு தான்.

பிரபல முன்னணி சேனலான சன் டிவி எண்ணற்ற சீரியல்களை திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை துவங்கி இரவு வரை ஒளிபரப்பி வருகிறது. இதில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது ரோஜா. தற்போது இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சீரியலாகும். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி ரோஜா சீரியலின் முதல் எபிசோட் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. தற்போது 1100 எபிசோட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் ஹீரோவாக அர்ஜுன் என்ற ரோலில் கர்நாடகாவை சேர்ந்த நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார். ஹீரோயினாக ரோஜா என்ற ரோலில் ஆந்திராவை சேர்ந்த நடிகை பிரியங்கா நல்கார் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகன் என்ற டைட்டிலை வென்றார் ரோஜா சீரியல் ஹீரோவான நடிகர் சிபு சூர்யன். அப்போது நடந்த நிகழ்வுகள் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி ரோஜா சீரியல் ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் நெகிழ செய்து உள்ளது.

நடிகர் சிபு சூர்யன் மனம் கவர்ந்த நாயகன் விருதினை பெற்ற பிறகு பேசிய விழா தொகுப்பாளினி, உங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் இந்த 2 தீவிர ரசிகர்களை நீங்கள் சந்தித்தாக வேண்டும் என்று கூறுகிறார். இதனை தொடர்ந்து ஒரு குட்டி பெண்குழந்தை மேடைக்கு வந்து, நான் ரோஜா சீரியல் அர்ஜுன் அங்கிளின் தீவிர ரசிகை, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று மைக்கில் கூறுகிறார். பின் சிபு சூர்யனின் போட்டோவை மேஜிக் செய்து ஃபிரேமில் வர வைத்து. இந்த மேஜிக் போட்டோ உங்களுக்கு தான் என்று அவரிடமே பரிசாக கொடுத்துவிட்டு செல்கிறார்.

இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் தான் அனைவரையும் நெகிழ செய்து விட்டது. மற்றொரு தீவிர ரசிகை என்று கூறி குடிசை வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் பேசும் வீடியோ மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய அந்த பெண் தனது பெயர் சரிதா என்றும் ஈக்காட்டு தாங்கலில் வசிப்பதாகவும் கூறி அறிமுகப்படுத்தி கொண்டு, ரோஜா சீரியலை தொடர்ந்து பார்ப்பதாக குறிப்பிட்டார். அர்ஜுன் அண்ணனை (சிபு சூர்யன்) தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி அன்பை வெளிப்படுத்துகிறார். வீடியோவின் இறுதியில் தான் அவர் ஒரு மாற்றுத்திறனாளி என தெரிகிறது. எல்லோரும் சில வினாடிகள் கண் கலங்கி இருக்க, அர்ஜுன் அண்ணா என்று குரல் கேட்கிறது.பார்த்தால் வீடியோவில் பேசிய சரிதா சர்க்கரை நாற்காலியில் அமர்ந்தபடி விழா மேடையை நோக்கி வருகிறார். அனைவரும் அவரை பார்த்து ஆரவாரம் செய்ய, நீங்கள் வர வேண்டாம் நான் வருகிறேன் என்று கூறி தன்னை அண்ணன் என்றழைத்த ரசிகையை, தன்னிரு கைகளாலேயே மேடைக்கு தூக்கி வந்தார் சிபு. அவரை தரையில் அமர செய்து விட்டு தானும், ரசிகைக்கு பக்கத்திலேயே கீழே அமர்ந்து கொண்டார்.

Also Read : கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் சொத்து மதிப்பு...

இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய சரிதா, இந்த தங்கச்சியால குடுக்க முடிந்த கிஃப்ட் இது தான் என்று கூறி விபூதியை எடுத்து சிபுவின் நெற்றியில் பூசி விடுகிறார். பின் தனது கணவர் மற்றும் மகனை மேடைக்கு அழைக்க விரும்பும் சரிதாவின் கோரிக்கையை ஏற்று அவர்களை மேடைக்கு அழைக்கிறார் சிபு. அவர்களும் வருகிறார்கள். பின் சீரியலில் நீங்கள் உங்கள் தம்பி மற்றும் அம்மாவிடம் பாசம் கட்டுவதை பார்க்கும் போது என் தாயின் நினைவு வருகிறது என்று கூறி கண்கலங்கி அழுகிறார்.

Also Read : மேக்கப் இல்லாமல் ஜொலிக்கும் வாணி போஜன்..

உடனே ரசிகையின் கண்களில் வழியும் நீரை தன் கைகளால் துடைத்தபடி அழாதீங்க என்று கூறும் சிபு, உங்கள் குழந்தையை பாருங்க. அத பார்த்து நீங்க சிரிச்சிட்டே இருக்கனும். இது போதும் உங்களுக்கு என்று சரிதாவை தேற்றுகிறார் சிபு. பின்னர் நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் சரிதாவை மேடையில் இருந்து கைகளில் தூக்கி சென்று கீழிறங்கி சக்கர நாற்காலியில் உக்கார வைத்தார் மக்களின் மனம் கவர்ந்த நாயகன்.
Published by:Selvi M
First published:

Tags: Sun TV, Viral Video

அடுத்த செய்தி