ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Master Chef : பிரம்மாண்டத்தின் உச்சத்தில் சன் டிவி யின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி..

Master Chef : பிரம்மாண்டத்தின் உச்சத்தில் சன் டிவி யின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி..

 மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் ப்ரோமா வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சின்னத்திரையில் சீரியல்கள், எண்ணற்ற நிகழ்ச்சிகள் இருந்தாலும் உணவு சமைப்பது போன்ற ஷோக்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெரும். குறிப்பாக சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ பெரும் வரவேற்பை பெற்றது.

குக் வித் கோமாளி சீசன் 3 நிறைவடைந்துள்ள நிலையில் சீசன் 4 தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சீசன் 3 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதையடுத்து அதில் பங்கேற்றவர்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளனர். மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலிலும் முன்னிலை பெற்றது.

இதனை பார்த்த மற்ற தொலைக்காட்சிகளும் இதுபோன்ற ஷோ ஒன்றை நடத்த திட்டமிட்டனர். அந்த வரிசையில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை சன் டிவி எடுத்து வருகிறது.

மாஸ்டர் செஃப் தமிழ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமையல் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அந்த படப்பிடிப்பில் தமன்னாவும் கலந்து கொண்டார். அப்போது விஜய் சேதுபதியும் அவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

Also Read : தமிழில் தயாராகும் சாய் பல்லவியின் புதிய படம்..

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், கோலாகலமாக தொடங்கும் வீடியோவில், விஜய் சேதுபதி மற்றும் தமன்னா இருவரும் உள்ளனர். மாஸ்டர் செப் யாரு? என்ற பாடல் ஒலிக்கிறது. தமன்னா, விஜய் சேதுபதியிடம் ஆர் யூ ஓகே பேபி என கேட்க, அதற்கு விஜய் சேதுபதி கொஞ்சம் டென்சனாக தான் உள்ளது என கூறும் காட்சிகள் உள்ளது. நீ கலக்கு பேபி என தமன்னா கூறும் வகையில் டீசர் முடிகிறது. உலக அளவில் புகழ்பெற்ற சமையல் கலையின் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி என குறிப்பிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Also read : வாரிசுகளின் ஆதிக்கத்தில் மலையாள சினிமா..

முன்னதாக முதல் டீசர் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் வல்லுநர்களை அறிமுகப்படுத்தினர். ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் இதில் ஜட்ஜ்களாக உள்ளது தெரியவந்தது. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் பல சுற்று ஆடிஷன்களுக்குப் பிறகு 20 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறன்களை வெளிப்படுத்துவார்கள் மற்றும் அதில் ஒருவர் மாஸ்டர் செஃப் தமிழின் அறிமுக சீசன் டைட்டிலை வெற்றி பெறுவார். விஜய் சேதுபதி முதல் முறையாக ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Vijay Sethupathi