ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

முதலிடம் பிடிக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

முதலிடம் பிடிக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

முதலிடம் பிடிக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

  • 2 minute read
  • Last Updated :

டிஆர்பி வரிசையில் எப்போதும் சன் டிவி சீரியல்களும், விஜய் டிவி சீரியல்களும் போட்டிபோட்டுக் கொண்டு முன்னிலை வகிக்கும். வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தை அமைப்பதன் மூலம் பல சீரியல்கள் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொருவாரமும் வெளியாகும் டிஆர்பி-யில் சன் டிவி சீரியல்களும், விஜய் டிவி சீரியல்களும் மாறி மாறி முதலிடம் பிடிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக சன் டிவி-யின் இந்த ஒரு சீரியல் மட்டும் எந்த சீரியலுக்கும் விட்டுக்கொடுக்காமல் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இதனால், சீரியல் குழு சந்தோஷத்தில் உள்ளனர். அது வேறு எந்த சீரியலும் இல்லை. சமீபத்தில் தொடங்கப்பட்ட கயல் சீரியல் தான். இந்த சீரியல் ஒளிபரப்பான சில நாட்களிலேயே சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற ஹிட் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர் அதே சேனலில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் எதோ சில காரணங்களால் சீரியல் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க.. வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்!

அதேபோல் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து கலக்கிய சைதன்யா தான், கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே உள்ள ரசிகர்கள் பட்டாளம் காரணமாக சீரியல் ஒளிபரப்படுவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்த நிலையில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் அளவுக்கு கதைக்களத்தை மெருகேற்றி வருகிறது கயல் சீரியல்.

நர்சாக பணிபுரியும் கயல் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அதுமட்டுமல்லாமல், தனது தம்பி தங்கைகளை கவனித்து கொள்ளும் ஒரு குடும்பத்தலைவராகவும், தைரியமான பெண்ணாகவும் கயல் இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக கதாநாயகன் செயல்படுகிறார். மேலும் தனது காதலை கயலிடம் எப்படி சொல்வது என்று தயங்கி தயங்கி நிற்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், தினசரி கயல் அனுபவித்து வரும் குடும்ப கஷ்டங்கள் பற்றி இந்த கதை சித்தரிக்கிறது.

இதையும் படிங்க.. பிக் பாஸில் பிரியங்காவை வெளியேற்ற முடிவு செய்த ராஜூ.. புரமோவில் அதிர்ச்சி!

இதனால் அனுதினமும் கயல் சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் டாப்பில் இருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவியின் கயல் சீரியல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எப்போதும் முதலிடம் பிடிக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த வகையில் இப்போது கயல் சீரியல் தான் தமிழக ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் என்ற பெயர் பெற்றுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: