ரசிகர்களிடம் கவனம் பெறும் சன் டிவி சீரியல் நடிகரின் திருமண வீடியோ

ரசிகர்களிடம் கவனம் பெறும் சன் டிவி சீரியல் நடிகரின் திருமண வீடியோ

நடிகர் ராகுல் ரவியின் திருமண வீடியோ

நடிகர் ராகுல் ரவியின் திருமண வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

  • Share this:
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் மாடலிங் துறையிலிருந்து திரைத்துறையில் 2013-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களான ஃபகத் பாசில், துல்கர் சல்மான் ஆகியோரது படங்களில் நடித்திருக்கும் இவர் பொன்னம்பிளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தமிழில் சன் டிவியில் ‘நந்தினி’ சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார் ராகுல். இத்தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராகுல், அதைத்தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘சாக்லேட்’ தொடரிலும் நாயகனாக நடித்தார்.

கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் இத்தொடர் சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக சன் டிவி அறிவித்தது. தற்போது சன் தொலைக்காட்சியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் யுவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.




சமீபத்தில் மாடலிங் துறையைச் சேர்ந்த லக்‌ஷ்மி நாயரை ராகுல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது திருமண வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

சீரியல் மட்டுமல்லாது தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் ராகுல் ரவி கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: