சன் டிவி சீரியல் நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

சன் டிவி சீரியல் நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

சின்னத்திரை நடிகை லீசா

தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக கண்மணி சீரியல் நடிகை லீசா தெரிவித்துள்ளார்.

  • Share this:
சன் டிவியில் ஒளிபரப்பான முக்கிய தொடர்களில் ஒன்று ‘கண்மணி’.  சஞ்சீவ் ஹீரோவாக நடித்த இத்தொடரில் அவருக்கு ஜோடியாக சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் லீசா நடித்தார். சஞ்சீவ் - லீசா தம்பதிக்கு ரசிகர்களும் ஏராளம். இத்தொடரின் மூலம் நடிகை காதல் சந்தியா சின்னத்திரையில் அறிமுகமானார். 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இத்தொடரின் ஹீரோயின் லீசா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அவரது இன்ஸ்டா பதிவுகள் லைக்ஸ்களையும் குவித்து வந்தது. அதேபோல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட லீசா, ஷாஜஹான் படத்தில் விஜய் - மீனா ஜோடி நடனமாடி அசத்திய ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதேபோல் 2021-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் லீசா வெளியிட்ட வீடியோவும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 
View this post on Instagram

 

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)


இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டு புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் லீசா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை மீட்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் நடிகை லீசா கேட்டுக் கொண்டுள்ளார்.

 
Published by:Sheik Hanifah
First published: