பிரபல முன்னணி சேனலாக இருக்கும் சன் டிவி சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிறைய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சேனலில் கடந்த 1999 - 2001 வரை ஓடிய சித்தி சீரியல் இன்று வரை மிகவும் பிரபலமான, மக்கள் மனதில் நீங்காத சீரியலாக இருந்து வருகிறது. வெள்ளித்திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை ராதிகா, சாரதாவாக நடித்த இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து சன் டிவி-யில் அடுத்தடுத்து பல சீரியல்களை தயாரித்தும் அதில் நடிக்கவும் செய்தார் ராதிகா.
இவரின் சன் டிவி சீரியல்கள் பட்டியலில் அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி மற்றும் சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்கள் அடக்கம். இதில் சந்திரகுமாரி சீரியல் பழங்காலத்து கதையாக எடுக்கப்பட்டாலும் ரசிகர்களை கவர தவறிவிட்டது. இதனை அடுத்து அந்த சீரியலை ஒரு சில மாதத்திலேயே நிறைவுசெய்து விட்டனர். இந்நிலையில் வெள்ளித்திரையில் பார்ட் -2 எடுப்பது போல, பல சேனல்களில் ஹிட் அடித்த சீரியல்கள் சீசன் 2-வாக ஒளிபரப்பாகி அதுவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து தனது மெகா ஹிட் சீரியலான சித்தியை, சித்தி 2-வாக சன் டிவி-யில் களமிறக்கினார் ராதிகா. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ராதிகா சீரியலில் இருந்து பாதிலேயே வெளியேறி விட்டார். இருந்தாலும் நடிகை ராதிகாவின் ராடான் மீடியாவொர்க்ஸ் நிறுவனத்துடன், சன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் சித்தி 2-வில் ராதிகாவின் கேரக்டர் காண்பிக்கபடாமலேயே தற்போது பல மாதங்களாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சித்தி 2 சீரியலில், சில கேரக்டர்களில் நடிக்கும் நடிகர்கள் அவ்வப்போது திடீரென்று மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் சுப்புலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழ் சீரியல் எக்ஸ்பிரஸ் இன்ஸ்டா பேஜில் ஷேர் செய்யப்பட்டு உள்ள போஸ்ட்டில் இனி இவர் தான் சித்தி 2-வில் புதிய சுப்புலட்சுமி என்று கேப்ஷனிட்டு சீரியல் ஹீரோயின் ப்ரீத்தி ஷர்மாவுடன் அந்த நடிகை எடுத்து கொண்டுள்ள போட்டோ இருக்கிறது. சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஹீரோயினாகவும், கவின் என்றார் கேரக்டரில் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். டிவி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சித்தி சீரியல், கொரோனா லாக்டவுனில் காலை 8.30 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பான போது, லட்சக்கணக்கான சின்னத்திரை ரசிகர்கள் மீண்டும் அதை பார்த்து ரசித்து ஆதரவு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.