முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘சித்தி 2’ சீரியல் முடிவடையப்போகிறதா - ராதிகா சரத்குமார் விளக்கம்

‘சித்தி 2’ சீரியல் முடிவடையப்போகிறதா - ராதிகா சரத்குமார் விளக்கம்

சித்தி 2

சித்தி 2

சித்தி 2 சீரியல் விரைவில் முடிவடையப்போவதாக பரவும் தகவலைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய ரசிகருக்கு ராதிகா சரத்குமார் பதிலளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து மீண்டும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது.

ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடிக்க தற்போது புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நேற்று இத்தொடரில் கவின் - வெண்பா திருமணம் பற்றிய உண்மைகள் ராதிகாவுக்கு தெரிய வர அதை தன்னுடைய தவறுதான் என்று கூறி உடைந்து அழுகிறார்.

இக்காட்சியில் ராதிகா சாரதா அம்மாவாகவே வாழ்ந்திருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். முக்கிய திருப்புமுனையை எட்டியிருக்கும் சித்தி 2 சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சமூகவலைதளங்களில் சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இதைக்குறிப்பிட்டு ட்விட்டரில் ராதிகா சரத்குமாரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ராதிகா, சித்தி 2 சீரியல் நிறுத்தப்படாது என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Radhika sarathkumar, Sun TV