HOME»NEWS»ENTERTAINMENT»sun tv chithi 2 serial actress meera krishna dance video msb

Chithi 2: சித்தி 2 சீரியல் நடிகை வெளியிட்ட கலக்கல் டான்ஸ் வீடியோ

சித்தி 2 தொடரில் நடித்து வரும் நடிகை மீரா கிருஷ்ணா மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

Chithi 2: சித்தி 2 சீரியல் நடிகை வெளியிட்ட கலக்கல் டான்ஸ் வீடியோ
சீரியல் நடிகை மீரா கிருஷ்ணா
  • Share this:

1999-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ‘சித்தி’. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. இதையடுத்து மீண்டும் 2020-ம்ஆண்டின் தொடக்கத்தில் சித்தி 2 சீரியல் ஆரம்பமானது.

ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் கொரோனா பரவல் ஆரம்பிக்க படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து சித்தி 2 சீரியலில் ராதிகாவின் கணவராக நடித்து வந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு  ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கியது.

பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடிக்க தற்போது புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது இத்தொடரில் கவினின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் மீரா கிருஷ்ணா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் மாஸ்டரின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.





சமீபத்தில் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை ராதிகா சரத்குமார், “மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன். 'சித்தி 2' மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: