விஜய் பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட சன் டிவி சீரியல் நடிகை - வீடியோ

லீசா

சன் டிவியில் ஒளிபரப்பான ‘கண்மணி’ சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை லீசா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

  • Share this:
சன் டிவியில் ஒளிபரப்பான முக்கிய தொடர்களில் ஒன்று ‘கண்மணி’. இந்த தொடரின் மூலம் பல இதயங்களை கட்டிப்போட்ட நாயகி என்றால் அது லீசா தான். கண்மணி சீரியல் சன் தொலைக்காட்சியில் 2018ம் ஆண்டு அக்டோபர் 22 முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 28 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். சஞ்சீவ் ஹீரோவாக நடித்த இத்தொடரில் அவருக்கு ஜோடியாக சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் லீசா நடித்திருந்தார்.

சஞ்சீவ் - லீசா தம்பதிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இத்தொடரின் மூலம் நடிகை காதல் சந்தியா சின்னத்திரையில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் இந்த தொடர் கடந்த ஆண்டு நிறைவடைத்திருந்தாலும், இளசுகளின் மனதில் இருந்து லீசா என்றும் நீங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கேற்ப தனது சமூக வலைதளபக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி போட்டோ ஷூட் படங்களை பதிவிடுவது மற்றும் வீடியோக்களை பதிவிடுவது என எப்போதும் பிஸியாக இருப்பார்.

இதன் காரணமாக அவரது இன்ஸ்டா பதிவுகள் அதிகபட்ச லைக்ஸ்களை குவித்து வந்தது. அதேபோல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட லீசா, ஒரு சில நடன வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது இவர் வேட்டைக்காரன் படத்தில் வரும், என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாடலுக்கு செம கிளாமராக ஆட்டம் போட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோவை வழக்கம் போல் அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இவரின் இந்த நடன வீடியோ தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முன்னதாக இவர் ஷாஜஹான் படத்தில் விஜய் - மீனா ஜோடியாக நடனமாடி அசத்திய ‘சரக்கு வச்சிருக்கேன்’ பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவையும் நெட்டிசன்களின் எகோபத்திய வரவேற்பை பெற்றது. அதேபோல் 2021-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் லீசா வெளியிட்ட வீடியோவும் ரசிகர்களின் கவனத்தைப் ஈர்த்தது என்று சொல்லலாம்.

Photos : சோஃபாவில் படுத்தப்படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா-போட்டோஸ்

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட லீசா 1993ம் ஆண்டு பிறந்துள்ளார். ஆனால் இவர் பிறந்ததும், வளர்த்தும் சென்னையில் தான். இவர் எத்திராஜ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். படிப்பை முடித்த பிறகு சினிமா மீதான ஆசையில் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஆனால் பல படங்கள் நடித்தும் ரசிகர்களின் மனதில் நிலைக்க முடியவில்லை. இவர், பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Leesha charles (@leesha_eclairs)

இருப்பினும் படங்கள் தோல்வியை தழுவியதால் வெள்ளித்திரையில் தனது பெயரை நிலைநாட்ட தவறினார். இருந்தும் மனம் தளராத இவர் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடர முயற்சித்தார். அப்போதுதான் கண்மணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தார்.
Published by:Tamilmalar Natarajan
First published: