Home /News /entertainment /

Actor Surya : நள்ளிரவில் வெளியான எதற்கும் துணிந்தவன் செகண்ட் லுக்..

Actor Surya : நள்ளிரவில் வெளியான எதற்கும் துணிந்தவன் செகண்ட் லுக்..

சூர்யா

சூர்யா

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ‘எதற்கும் துணிந்தவன்’படத்தின் செகண்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

    சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சூர்யா 40 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. தொடர்ந்து நள்ளிரவில் செகண்ட் லுக்கை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர். 

    சூர்யாவின் 40 வது படம் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. ப்ரியங்கா அருள்மோகன் நாயகி. கிராமத்துப் பின்னணியில் தயாராகும் ஆக்ஷன் படமான இதன் ஒளிப்பதிவை ரத்னவேலு கவனிக்கிறார்

    நேற்று படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. படத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற பெயர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் சூர்யா வாளுடன் அமர்ந்திருக்கும் செகண்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது சன் பிக்சர்ஸ்




    எதற்கும் துணிந்தவனுக்கு டிஇமான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டிங். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். நேற்று வெளியான சார்பட்டா பரம்பரை படத்துக்கும் அன்பறிவே சண்டைப் பயிற்சி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்துக்கும் இந்த இரட்டையர்களே சண்டைக் காட்சி அமைக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor Surya

    அடுத்த செய்தி