• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எதற்கும் துணிந்தவன் தேர்ட் லுக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்...!

எதற்கும் துணிந்தவன் தேர்ட் லுக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்...!

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

நேற்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டவர்கள், நள்ளிரவில் செகண்ட் லுக்கை வெளியிட்டு, இன்று தேர்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சூர்யாவின் 40 வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

முன்பு பட வெளியீட்டு தேதியைதான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதைத்தான் தயாரிப்பு நிறுவனங்களும் கொண்டாட்டமாக வெளியிட்டன. பிறகு படத்தின் ஆடியோ ரிலீஸ் முக்கியத்துவம் பெற்றது. டெக்னாலஜி நவீனமாகி, சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு நிலைமை மாறியது. படத்தின் டைட்டில் அறிவிப்பு எப்போது? நாளை காலை தேதியை வெளியிடுகிறார்கள் என்று படத்தின் பெயரை அறிவிக்கிற தேதிக்கே ஒரு அறிவிப்பு வெளியிட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படியே டைட்டில் அறிவிப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு, டீஸர் வெளியீடு, பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு, ஆடியோ வெளியீடு என்று பட வெளியீட்டுக்கு முன்பு முப்பத்தாறு வெளியீட்டு தேதிகளை அறிவித்து ரசிகர்களை டென்ஷனாக்கினார்கள். சன் பிக்சர்ஸ் ஒரு படி மேலே.

Also read... நடிகர் சூர்யாவின் ரியல் அரசியல் சம்பவங்கள்!

விஜய்யின் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அன்றே நள்ளிரவில் செகண்ட் லுக்கை வெளியிட்டனர். நேற்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டவர்கள், நள்ளிரவில் செகண்ட் லுக்கை வெளியிட்டு, இன்று தேர்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். பாயாசம்தான் என்றாலும் தொடர்ந்து மூன்றுவேளை அதையே தந்தால் ரசிகர்கள் என்னாவது



அதேபோல் பர்ஸ்ட் லுக்கில் வாளுடன் இருக்கும் அதே சூர்யாவை செகண்ட் லுக்கில் வாளுடன் உட்கார வைத்திருக்கிறார்கள். தேர்ட் லுக்கில் முகத்தை குளோசப்பில் காட்டுகிறார்கள். வித்தியாசமாக எதுவும் இல்லையே என்ற விரக்தியும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது

சன் பிக்சர்ஸ் இனியாவது பர்ஸ்ட், செகண்ட், தேர்ட் என அகல உழாமல் ஒரே லுக்கில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளுமா



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: