• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Surya 40 : அண்ணாத்த ஸ்டைலில் சூர்யா 40 அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..

Surya 40 : அண்ணாத்த ஸ்டைலில் சூர்யா 40 அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..

சூர்யா

சூர்யா

சூர்யா 40 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் ஒரு போஸ்டர் மூல, வெளியிட்டுள்ளது.

  • Share this:
    சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த அறிவிப்பை அண்ணாத்த ஸ்டைலில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

    ஒரே நேரத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 வது படம் ஆகியவற்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில், அண்ணாத்த படம் நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும், விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்காக ரஜினி முதுகு காட்டியபடி நிற்கும் புகைப்படத்துடன் தனி போஸ்டரை சன் பிக்சர்ஸ் வடிவமைத்திருந்தது



    சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதை வீடியோ டீஸர் மூலம் அறிவித்திருந்த சன் பிக்சர்ஸ், இன்று காலை சூர்யா, ரஜினி ஸ்டைலில் முதுகு காட்டியபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இன்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியாவதை மறுபடி உறுதி செய்துள்ளது. ரசிகர்கள் சூர்யாவின் முகம் தெரியாத இந்தப் புகைப்படத்தையே பர்ஸ்ட் லுக் போன்று கொண்டாடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: