பொங்கலுக்கு வரும் அண்ணாத்த: அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அவரின் 168 ஆவது திரைப்படத்திற்கு அண்ணாத்த என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா குஷ்பூ மீனா ஆகிய நான்கு நாயகிகள் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளது.

ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

 • Share this:
  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

  தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

  கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாள்களுக்கும் மேலாக திரைத்துறைப் பணிகள் முழுவதும் முடங்கியுள்ளன. அதன் பல படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு பொங்கலில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், 2020-ம் ஆண்டு பொங்கலில் ரஜினி நடித்த தர்பார் படமும் திரைக்கு வந்தது.


  Also see:
  Published by:Karthick S
  First published: