Home /News /entertainment /

Sultan : போய் விவசாயம் பண்ணனும்... இணையத்தில் வெற்றிநடை போடும் கார்த்தியின் சுல்தான்! ரசிகர்கள் உற்சாகம்

Sultan : போய் விவசாயம் பண்ணனும்... இணையத்தில் வெற்றிநடை போடும் கார்த்தியின் சுல்தான்! ரசிகர்கள் உற்சாகம்

 சுல்தான்

சுல்தான்

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் சுல்தான் திரைப்படம் குறித்து இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிடோர் நடிப்பில்  வெளியான படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே நல்ல வசூலைப் பெற்றிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் திரைப்படம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த படத்தின் தயாரிப்பாளர் பாக்கியராஜ், 4 வருடத்திற்கு கழித்து ரெமோ திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய படம் வெளியாகியிருக்கிறது அதுவும் கொரோனா வின் தாக்கங்கள் முடிந்து மிகப் பெரிய பிரச்னைகளை பிறகு சினிமாவை மக்கள் பார்ப்பது மிக சந்தோஷமாக இருக்கிறது.

    அதுவும் என்னுடைய திரைப்படம் திரையில் வெளியான அன்று மிகவும் எல்லோருடைய ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. குடும்பத்துடன் சந்தோஷமாக திரைப்படத்தை எல்லோரும் வந்து திரையரங்கில் படத்தை பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “எங்களுக்கு மிகப்பெரிய வசூலைக் கொடுத்ததில் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு நன்றி. இதுவரை கார்த்தி நடித்து வெளியான படங்களில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்தது சுல்தான் தான் என்று கூறியுள்ளார்.



    சுல்தான் திரைப்படம் குறித்து இணையத்தில் பலரும் பதிவிட்டுவருகின்றனர். இத்திரைப்பம் குறித்து மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர்.



    இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். ரெமோ திரைப்படத்தை விட பெரிய அளவில் வெற்றி பெறட்டும். கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, பிரபு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Actor Karthi, Actress Rashmika Mandanna

    அடுத்த செய்தி