அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி ப்ரொமோட் பண்றீங்களா.. கொதித்தெழுந்த சுல்தான் தயாரிப்பாளர்

அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி ப்ரொமோட் பண்றீங்களா.. கொதித்தெழுந்த சுல்தான் தயாரிப்பாளர்

SR Prabhu

சுல்தான் படத்தின் பைரஸி லிங்கை ட்விட்டர் பக்கத்தில் பதிவிவிட்ட நெட்டிசனுக்கு தயாரிப்பாளர், அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி ப்ரொமோட் பண்ற அளவுக்கு வளந்துடீங்ககலா என பதில் அளித்துள்ளார்.

  • Share this:
    மீண்டும் அதிகரித்த கொரோனா பரவல், அனல் பறக்கும் தேர்தல் களம் என பல நெருக்கடிகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான கார்த்தியின் சுல்தான் படத்துக்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    ஏற்கனவே பார்த்துப் பழகிய காட்சி அமைப்புகளால் இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவை வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்த இப்படம் மூன்று நாட்களில் ரூ.16 கோடி வரை வசூல் செய்து கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் தமிழில் மாஸ்டருக்கு பின் பெரிய ஓப்பனிங் பெற்ற படமாகவும் சுல்தான் உருவெடுத்துள்ளது.

    இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் சுல்தான் படத்தின் பைரஸி லிங்கை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் கமெண்ட் செக்ஸ்சனில் பதிவிட்டு சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கின்றது என பதிவிட்டார்.



    இதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, அடேய், என் கமெண்ட்ல வந்து என் படத்துக்கே பைரஸி ப்ரொமோட் பண்றீங்களா.. இதோ வரேண்டா என பதிவிட்டுள்ளார்.



     

    இவரது பதிவிற்கு பலரும் நகைச்சுவையாக எங்க தலைக்கு தில்ல பாத்தியா? என பதிவிட்டுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published: