மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டது உண்மையா? சுஹாசினி விளக்கம்

மணிரத்னத்தின் இந்த கடிதத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவரது, கையெழுத்து மோசடியாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

news18
Updated: July 30, 2019, 4:33 PM IST
மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட்டது உண்மையா? சுஹாசினி விளக்கம்
மணி ரத்னம்
news18
Updated: July 30, 2019, 4:33 PM IST
நாடு முழுவதும் நடைபெறும் கும்பல் கொலைகளைத் தடுத்த நிறுத்துங்கள் என்று மோடிக்கு பிரபலங்களில் எழுதிய கடிதத்தில் இருந்தது மணிரத்னத்தின் கையெழுத்துதான் என்று அவரது மனைவி சுஹாசினி உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் கும்பல் தாக்குதல் நடைபெற்றுவருகின்றன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுஹாசினிஇந்தநிலையில், இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என 49 பேர் இந்தச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோடிக்கு கூட்டாகச் சேர்ந்து கடிதம் எழுதினர். அதில், இயக்குநர் மணிரத்னத்தின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

’ஜெய் ஸ்ரீராம்’ போர் முழக்கமாகிவிட்டது! மோடியிடம் கொந்தளிக்கும் பிரபல இயக்குநர்கள்

அதனையடுத்து, மணிரத்னத்தின் இந்த கடிதத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவரது, கையெழுத்து மோசடியாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவர், கும்பல் கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்துக்கு மணிரத்னம் உண்மையில் ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்வி இருந்துவந்தது.

Loading...

சுஹாசினி ட்விட்


இதற்கிடையில், பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ‘பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதில், மணிரத்னம் கிடையாது’ என்பது போல ட்விட் செய்திருந்தார். இந்தநிலையில், இதுகுறித்து ரமனா என்பவர் ட்விட்டரில் சுஹாசினிக்கு கேள்வி எழுப்பியிருந்தார். மணிரத்னம் கையெழுத்திட்டது போலி என்று செய்திகள் வருகின்றன. உண்மையா? என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சுஹாசினி, ‘அது தவறானது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், மணிரத்னம் தொடர்பாக ட்விட் செய்வதை நிறுத்துங்கள். போலியான விளக்கங்களை விட்டு விலகி இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...