• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காதல் சார்ந்த எதையும் தொந்தரவு செய்வது பாவம்... ‘பாவக்கதைகள்’ பற்றி இயக்குநர்கள் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்

காதல் சார்ந்த எதையும் தொந்தரவு செய்வது பாவம்... ‘பாவக்கதைகள்’ பற்றி இயக்குநர்கள் சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்

Youtube Video

'பாவக் கதைகள்' படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர்கள் வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டுள்ளனர்

  • Share this:
ஒரே கருவை மையமாக வைத்து நான்கு இயக்குனர்களின் வெவ்வேறு கதைகள் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள பாவக் கதைகள் இன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ளது. பிரகாஷ்ராஜ், அஞ்சலி, சாய்பல்லவி, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் வெற்றிமாறன், ஓடிடி தளங்கள் இது போன்ற முயற்சிகளை சாத்தியப்படுத்த கருவியாக மாறி உள்ளது என தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் படம் இயக்குவது தன்னை உற்சாகப்படுத்தியதாகவும், கௌதம் மேனன், வெற்றி மாறன் உள்ளிட்டோர் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உற்சாகமே இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுத்ததாகவும் இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ‘திரௌபதி’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஹீரோயினாகும் சீரியல் பிரபலம்

ஒவ்வொரு இயக்குநருக்கும் கதை கேட்காமல் நடிக்க ஒரு நாயகன் இருப்பார் என்றும் தனக்கு சிம்பு அதுபோலத்தான் என்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நமது செய்தியாளர் முபஷ்ஷிர் எழுப்பிய கேள்விக்கு சக இயக்குனர்களுடன் இணைந்து அவர் அளித்த பதில் கலகலப்பாக அமைந்தது.

காதலை சார்ந்த எதையும் தொந்தரவு செய்வது பாவம் என்ற கருத்தை சொல்லவே பாவக் கதைகள் திரைப்படத்தை இயக்கி உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் நான்கு பேர் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருப்பது ரசிர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. மாறிவரும் சூழலும் வளர்ந்து வரும் இணைய தொடர்புகளும் அதை சாத்தியப்படுத்தி உள்ளன.



உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: