Home /News /entertainment /

BiggBoss Julie: காதலர் மீதான புகாரில் திடீர் திருப்பம்.. ஜூலியே காதலை துண்டித்ததாக தகவல்!

BiggBoss Julie: காதலர் மீதான புகாரில் திடீர் திருப்பம்.. ஜூலியே காதலை துண்டித்ததாக தகவல்!

ஜூலி

ஜூலி

2017ம் ஆண்டு ஜூலிக்கும் ( (Julie) அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது மனிஷ் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.தற்போது ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக மனீஷ் உடனான காதலை துண்டித்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பிக்பாஸ் புகழ் ஜூலி தன் காதலர் மீது கொடுத்த புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் (BiggBoss) என்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி (எ) மரியா ஜூலியானா(26). இவர் தனது பெற்றொருடன் பரங்கி மலை ஈரோப்பியன் லேன் பகுதியில் வசித்து வருகிறார். ஜூலி (Julie) அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரில் அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள தமிழகத்தின் மிகப்பிரபலமான அழகு நிலையத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் பணம் மற்றும் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.

அழகு நிலையத்துக்கு சென்ற போது மேனேஜர் மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்த நிலையில், மனிஷுக்கு தான் பல்சர் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் வாங்கிக் கொடுத்து 2.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக ஜூலி புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: என்னது இது குக் வித் கோமாளி பிரபலமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!


இந்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட மனிஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது கேரளாவை பூர்வீகமாக கொண்ட மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக மனீஷ் உடனான காதலை துண்டித்து அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும்  அவர் இல்லாமல் தன்னால்  வாழ இயலாது எனவும் கூறி அழுது அடிக்கடி கால் செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இதனால் மனிஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார்.

மேலும் படிங்க: நயன்தாராவின் டப்பிங்கை ரொமான்டிக்காக அறிவித்த விக்னேஷ் சிவன்! - படங்கள்...


மேலும் ஜூலியும் மனிஷும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை போலீசார் அழித்துவிட்டு ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரைக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Big boss tamil, Bigg boss Julie

அடுத்த செய்தி