• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரியாமணியின் திருமணம் செல்லாது- புதிதாக வந்த சிக்கல்

பிரியாமணியின் திருமணம் செல்லாது- புதிதாக வந்த சிக்கல்

தனது கணவருடன் பிரியாமணி

தனது கணவருடன் பிரியாமணி

நடிகை பிரியாமணி கணவரின் முதல் மனைவி ஆயிஷா கூறியிருப்பது, ப்ரியாமணியின் திருமண வாழ்வில் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    2017 இல் நடிகைபிரியாமணி முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் செல்லாது என முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா கூறியிருப்பது, ப்ரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    பிரியாமணி பெங்களூருவைச் சேர்ந்தவர். 2003 இல் தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். அடுத்த வருடமே கண்களால் கைது செய் தமிழ்ப் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தவருக்கு 2007 இல் பருத்திவீரன் படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது.

    2017 இல் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான முஸ்தபா ராஜை பிரியாமணி திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டவர் தி பேமிலி மேன் வெப் சீரிஸில் கிடைத்த புகழின் காரணமாக மீண்டும் சினிமா, வெப் சீரிஸ்களில் பிஸியானார். நான்கு வருடங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கழிந்த பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது

    PHOTOS : முதுகில் இவ்வளோ பெரிய ஓட்டையா! வேற லெவல் கவர்ச்சி காட்டிய சோனம் பஜ்வா..



    "நானும், முஸ்தபாவும் குழந்தைகளின் நலன்கருதி இதுவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அதனால், முஸ்தபாவின் இரண்டாவது திருமணம் செல்லாது" என ஆயிஷா கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள முஸ்தபா, "2010 இல் நானும், ஆயிஷாவும் பிரிந்துவிட்டோம். 2013 இல் சட்டப்படி விவகாரத்தும் பெற்றோம். பிரியாமணி யுடன் திருமணம் முடிந்து நான்காண்டுகள் சும்மாயிருந்துவிட்டு இப்போது தேவையில்லாமல் ஆயிஷா பிரச்சனையை கிளப்புகிறார்" என கூறியுள்ளார்.  

    ALSO READ: விரைவில் வெற்றி விழா காணும் விஜய் டிவி சீரியல்: உற்சாகத்தில் ரசிகர்கள்



    ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கும் ஆயிஷா, "பிரியாமணியை திருமணம் செய்கையில், தானொரு பேச்சிலர் என்றுதான் முஸ்தபா நீதிமன்றத்தில் கூறினார். குழந்தைகள் நலனுக்காக பிரச்சனைகள் தீரும் என இதுவரை காத்திருந்தேன். இனி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என கூறியுள்ளார். ஆயிஷாவின் இந்த திடீர் அதிரடியால் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: