முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு

ஜூடோ ரத்தினம்

ஜூடோ ரத்தினம்

பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

  • Last Updated :

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வீட்டில் அரை கிலோ வெள்ளி, விலையுயர்ந்த பட்டு சேலைகள் உள்ளிட்டவைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டை இயக்குநராக பணி. எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், பிரேம் நசீர், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் பனிபுரிந்துள்ளார். தற்போது 92 வயதாகும் கே.கே.ரத்தினம், வயது மூப்பின் காரணமாக அவரது சொந்த ஊரான குடியாத்தம் தரணம்பேட்டை, பெரியப்ப முதலி தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி திரைப்பட நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை சென்றார்.

Stunt director Judo Rathnam's home theft, judo rathnam,  tamil stunt master list, Judo Rathnam images, Judo Rathnam photos, Judo Rathnam latest news, Judo Rathnam choreographer, fight master Judo Rathnam, ஜூடோ ரத்தினம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம், சண்டை இயக்குநர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு, ஜூடோ ரத்தினம் புகைப்படங்கள்
ரஜினியுடன் ஜூடோ ரத்தினம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் ஜூடோ ரத்தினத்தின் வீட்டு கதவு திறந்திருப்பதைப் பார்த்த அவரது எதிர் வீட்டினர், அவரது மகளுக்கு தகவல் கொடுத்தனர். ரத்தினத்தின் மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதோடு பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Stunt director Judo Rathnam's home theft, judo rathnam,  tamil stunt master list, Judo Rathnam images, Judo Rathnam photos, Judo Rathnam latest news, Judo Rathnam choreographer, fight master Judo Rathnam, ஜூடோ ரத்தினம், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம், சண்டை இயக்குநர் ஜூடோ ரத்தினம் வீட்டில் திருட்டு, ஜூடோ ரத்தினம் புகைப்படங்கள்
ஜூடோ ரத்தினத்தின் வீடு

உடனடியாக குடியாத்தம் திரும்பிய ஜூடோ ரத்தினம் தனது வீட்டில் 15 விலை உயர்ந்த பட்டுசேலைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், விலை உயர்ந்த 2 ரோலக்ஸ் வாட்ச்கள், ரூ.20 ஆயிரம் உள்ளிட்டவை திருட்டு போய் இருப்பதாக புகார் அளித்தார். இதையடுத்து குடியாத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema