• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஐசரி கணேஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி..

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி..

சிம்பு, - கவுதம் வாசுதேவ் மேனன்

சிம்பு, - கவுதம் வாசுதேவ் மேனன்

10 ஆண்டுகளுக்கும் முன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகவும், காதல்காவியமாகவும் போற்றப்பட்டது.

  • Share this:
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக இருந்த நடிகர் சிம்பு, படங்களின் தொடர் தோல்வி, தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை என பல்வேறு சிக்கல்களால் திரைத்துறையின் லைம்லைட்டில் இருந்து சிறிதுகாலம் பின்தங்கியிருந்தார். ஆனால், தற்போது அவருடைய திரைப்பயணம் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிம்புவின் நடிப்பு சிறந்த கம்பேக்காக இருப்பதாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

தற்போது வெங்கட் பிரபுவின் மாநாடு பட சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சிம்பு, தனது அடுத்த படம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் முன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாகவும், காதல்காவியமாகவும் போற்றப்பட்டது.

இதைப்போன்றதொரு படத்தை சிம்பு - கவுதம்வாசுதேவ் மேனன் கூட்டணி மீண்டும் வழங்க வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். அந்தக் குறையைப் போக்கும் வகையில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை, வேல்ஸ் பிலின் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புதிய படத்துக்கான அட்வான்ஸ் தொகையை சிம்புவுக்கு வழங்கியுள்ள ஐசரி கணேஷ், அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெயிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஐசரி கணேஷ் புதிய படத்துக்கான அட்வான்ஸ் தொகையை சிம்பு மற்றும் அவரது தாயிடம் வழங்குகிறார். புதிய படம், மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டதாக இருப்பதால் தானும் ஆர்வமாக இருப்பதாக ஐசரி கணேஷ் கூறியுள்ளார். கெரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்த காலத்தில் சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை உருவாக்கினர்.

கதாநாயகியாக திரிஷா நடித்த இந்தப் படம், அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே ஐபோனில் உருவாக்கப்பட்டது. இந்தக் குறும்படமும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றதால், இருவரும் கூட்டணி அமைக்கும் புதிய பட அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில், சகோதரர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம் எனவும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷூடன் புதிய பயணத்தை தொடங்கியிருப்பது கூடுதலான மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

சிம்பு - கவுதம் வாசுதேவ் மேனன்


கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், சில கதைகள் மட்டுமே மனதுக்கு நெருக்கமாகவும், மிகவும் சிறப்பானதாகவும் இருக்கும், அந்தமாதிரியான கதைதான் இது என உற்சாகமாக தெரிவித்துள்ளார். பிளாக்பஸ்டர் மூவியாக விண்ணைத் தாண்டி வருவாயா இருந்ததால், அதைவிட இன்னும் சிறப்பான படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மாநாடு, பத்துதல, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் சிம்பும், கவுதமும் தனித்தனியாக பணியாற்றி வருவதால், இந்த வேலைகள் முடிந்தவுடன் புதிய படத்துக்கான சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: