ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாஸ்டர்: விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்! வைரல் புகைப்படம்

மாஸ்டர்: விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள்! வைரல் புகைப்படம்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கர்நாடக ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.முதல் மூன்று நாட்களிலே கிட்டத்திட்ட 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்தில்  உள்ளது. இரண்டாவது இடத்தில் 11.75 மில்லியன் டாலர் வசூல் செய்த  ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்ற ஹாலிவுட் படம் உள்ளது. இந்த செய்தி தளபதி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து  மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.பவானி என்ற கதாபாத்திரத்தில் தனது அசாதாரண நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.மேலும் அர்ஜுன் தாஸ், கௌரி,சாந்தனு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

லாக்டவுனுக்கு பின் பெரிய பட்ஜெட்டில் திரையரங்குகளில் வெளியான முதல் தமிழ் படம் என்றால் அது விஜய்யின் மாஸ்டர் படம் தான். நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர் கூட்டம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் கர்நாடகாவில் நடிகர் விஜய்க்கு மாஸ்டர் கெட்டப்பில் ரசிகர்கள் சிலை வைத்துள்ளனர்.

விஜய்க்கு சிலை வைக்கும் அளவிற்கு அண்டை மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

விஜய்யின் சிலையுடன் ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்து தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்..

First published:

Tags: Actor vijay, Master