ராஜமௌலியின் மகன் திருமணம் செய்யும் பிரபல நடிகர் வீட்டுப் பெண்!
ராஜமௌலியின் மகன் திருமணம் செய்யும் பிரபல நடிகர் வீட்டுப் பெண்!
பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் மகனுக்கும், நடிகர் ஜெகபதிபாபுவின் சகோதரர் மகளுக்கும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் மகனுக்கும், நடிகர் ஜெகபதிபாபுவின் சகோதரர் மகளுக்கும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலியின் மகனுக்கும், நடிகர் ஜெகபதிபாபுவின் சகோதரர் மகளுக்கும் ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
`பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தன. தற்போது தனது அடுத்த படத்தை ஆர் ஆர் ஆர் என்ற தலைப்பில் துவங்கியுள்ளார். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது. படத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
அதேவேளையில் இயக்குநர் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயாவுக்கும் பிரபல நடிகர் ஜெகபதிபாபுவின் சகோதரர் மகள் பூஜா பிரசாத்துக்கும் ஜனவரி மாதம் 5-ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. கார்த்திகேயா மற்றும் பூஜா பிரசாத் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதை ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
Yesss!! Very excited to dive into this new phase of my life with the love of my life! Pooja❤️
Thank you for the all love that you have been pouring. Can’t thank you all enough! Love always! ❤️🙏 pic.twitter.com/FybOavQosD
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “என்னுடைய வாழ்க்கையில் பூஜாவுடன் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறேன்”என்று கூறியுள்ளார். பூஜா பிரசாத் பக்தி பாடல்களை பாடும் பாடகர் என்பதோடு, பாகுபலி படத்தில் பணியாற்றிய கார்த்திகேயா தற்போது ஒரு கபடி டீமை விலைக்கு வாங்கி தெலங்கானா பிரிமீயர் லீக்கில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ பார்க்க : ரூ.1 கோடி ஏலச்சீட்டு மோசடி: பிரபல மசாலா கம்பெனி அதிபர் கைது
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.