ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'10 நிமிஷம்'.. RRR படத்தை புகழ்ந்து தள்ளிய அவதார் இயக்குநர்.. துள்ளிக்குதிக்கும் ராஜமெளலி!

'10 நிமிஷம்'.. RRR படத்தை புகழ்ந்து தள்ளிய அவதார் இயக்குநர்.. துள்ளிக்குதிக்கும் ராஜமெளலி!

ராஜமெளலியை சந்தித்த கேமரூன்

ராஜமெளலியை சந்தித்த கேமரூன்

RRR : டைட்டானிக், அவதார் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், RRR திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலய பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூலித்தது. மேலும் ரசிகர்களும் அந்த திரைப்படத்தை கொண்டாடினர். இந்த திரைப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பி உள்ளனர். மேலும் ஆர். ஆர்.ஆர் படத்தின் திரையிடல் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் டைட்டானிக், அவதார் படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் The Great ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படத்தைப் பார்த்தார். அவருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் தன்னுடைய மனைவி Suzy-க்கும் படத்தை பரிந்துரைத்து, அவருடன் மீண்டும் ஒருமுறை ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்தார் என தெரிவித்துள்ளார். மேலும் படத்தைப் பற்றி தங்களுடன் 10 நிமிடம் பகுப்பாய்வு செய்தது நம்ப முடியவில்லை எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நீங்கள் சொன்னது போல உலகத்தின் மேல் இருக்கிறேன் எனவும் மகிழ்ந்துள்ளார் எஸ்.எஸ்.ராஜமௌலி.

First published: