Home /News /entertainment /

கடைதிறப்பு விழாவில் தள்ளு முள்ளு - ஓட்டம் பிடித்த ஸ்ருதிஹாசன்!

கடைதிறப்பு விழாவில் தள்ளு முள்ளு - ஓட்டம் பிடித்த ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

கடைதிறப்பு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்பினார் நடிகை ஸ்ருதிஹாசன்.

சென்னை ஆவடி மாநகராட்சி பகுதியில் புதியதாக உதயமாகி உள்ள வள்ளி மயில் சூப்பர் ஸ்டோர் திறப்பு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த புதிய சூப்பர் மார்க்கெட்டை கமலஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

ஸ்ருதிஹாசன் வருகையையொட்டி மேள தாளங்கள் காலை உணவு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடன் , திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் போஸ் வெங்கட்டும் வந்திருந்தார். இருவரையும் காண அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கடையின் உள்ளே வந்த ஸ்ருதிஹாசன் கட்டிடத்தின் நான்காவது மாடிக்குச் சென்றார். அங்கு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது



அந்த அறையில் உள்ள கூட்ட நெரிசலை கண்ட ஸ்ருதிஹாசன் பயந்து போனார். இளைஞர்கள் சிலர் கூட்டத்தில் செல்ஃபி எடுக்க முண்டியடித்துச் சென்றனர் இதனால் ஆத்திரமடைந்த ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை என ஸ்ருதிஹாசன் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress shruti Haasan

அடுத்த செய்தி