பிரபல நடிகையின் அறைக்குள் புகுந்து குரங்குகள் செய்த அட்டகாசம்

பிரபல நடிகையின் அறைக்குள் புகுந்து குரங்குகள் செய்த அட்டகாசம்

நடிகை ஸ்ரேயா ரெட்டி

தனது சத்தான உணவை குரங்குகள் பறித்துக் கொண்டதாக நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.

  • Share this:
2002-ம் ஆண்டு வெளியான ‘சாமுராய்’ படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகன்மானவர் ஸ்ரேயா ரெட்டி. விஷாலின் ‘திமிரு’ படத்தில் இவர் ஏற்று நடித்த ஈஸ்வரி கேரக்டர் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது.

இதையடுத்து வசந்தபாலனின் வெயில், பிரியதர்ஷனின் காஞ்சிவரம் உள்ளிட்ட கதைக்கும் தனது கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த ஸ்ரேயா ரெட்டி கடைசியாக ‘அண்டாவ காணோம்’ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை இயக்குநர் வேல்மதி இயக்கியிருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி, கடந்த 2008-ம் ஆண்டு விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் விஷாலின் தோரணை, வெடி உள்ளிட்ட படங்களையும் ஸ்ரேயா ரெட்டி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்த ஸ்ரேயா ரெட்டி அங்கு குரங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். முதல் வீடியோவில் ஸ்ரேயா தங்கியிருந்த வீட்டின் பால்கனிக்கு வந்த இரண்டு குரங்குகள் அங்கு டேபிளில் வைக்கப்பட்டிருந்த முந்திரி உள்ளிட்ட பருப்புவகை உணவுகளை கொறிக்கின்றன. அடுத்த வீடியோவில் ஜன்னல் வழியாக அறைக்குள் புகுந்த குரங்குகள் அங்கிருந்த ஸ்ரேயாவின் பேக், உணவுகளை எடுத்து அட்டகாசம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Sriya Reddy (@sriya_reddy)


உடற்பயிற்சியில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நடிகை ஸ்ரேயா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவார்.
Published by:Sheik Hanifah
First published: