தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கியப் புள்ளி... ஆதாரத்தை வெளியிடுவேன்: ஸ்ரீரெட்டி

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் நபரின் பெயரைச் சொல்லாமல் தனது குற்றச்சாட்டை நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கியப் புள்ளி... ஆதாரத்தை வெளியிடுவேன்: ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: October 28, 2018, 6:11 PM IST
  • Share this:
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பதவியிலிருக்கும் நபரின் பெயரைச் சொல்லாமல் தனது குற்றச்சாட்டை நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனிடையே அவருடைய வாழ்க்கை கதை `ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடித்து வருகிறார்.


இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ், அவரது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பளித்து அதற்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்ததாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கூறியிருந்தார்.

நடிகை ஸ்ரீரெட்டி தனது சமீபத்திய ஃபேஸ்புக் பதிவில் , “பல ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகைகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய அந்த நபர் மீடியா முன்பு புத்திசாலித்தனமாக பேசி வருகிறார். அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் உள்ள ஆதாரங்கள் மூலம் வழக்கறிஞர்களின் உதவியுடன் அவருடைய முகத்திரையை விரைவில் வெளியே கொண்டு வருவேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியை வைத்துக் கொண்டு அவர் செய்யும் அத்துமீறல்கள் விரைவில் வெளிப்படும். விரைவில் திருமணமாகவுள்ள அவர் நம்பர் ஒன் பிளாக் மெயிலர். விரைவில் அவருக்கு சிறை காத்திருக்கிறது.

பெரிய பதவியை கையில் வைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்களை மிரட்டி வருகிறார். தயாரிப்பாளர்கள் கோபப்பட்டால் அந்த நபரின் பதவி ஆட்டம் கண்டுவிடும். அவரால் பல சின்ன தயாரிப்பாளர்கள் பல துன்பங்களை அடைந்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.
First published: October 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading