`யூ ஆர் ஸ்வீட் ஹார்ட்’...விஷாலைப் புகழும் ஸ்ரீரெட்டி!

`யூ ஆர் ஸ்வீட் ஹார்ட்’...விஷாலைப் புகழும் ஸ்ரீரெட்டி!
ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: September 25, 2018, 8:20 PM IST
  • Share this:
நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ்சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையை கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரண்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனிடையே அவருடைய வாழ்க்கை கதை `ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடித்து வருகிறார்.


இந்நிலையில் நடிகர் விஷால் சண்டக்கோழி 2 பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீரெட்டி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதில், ``ஶ்ரீரெட்டி தமிழ் திரைப்படத்தில் நடிக்க நடிகர் சங்கம் எந்தத் தடையும் விதிக்காது. ஆனால் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும்” என்று பேசினார்.

விஷாலின் இந்தப் பேச்சு செய்தித்தாள்களில் செய்தியாக வெளியானது. இதைப்பார்த்த நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

First published: September 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading