’கோப்ரா’ படப்பிடிப்பை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி!

’கோப்ரா’ படப்பிடிப்பை முடித்த ஸ்ரீநிதி ஷெட்டி!

ஸ்ரீநிதி ஷெட்டி

பொன்னியின் செல்வன் ஷெட்யூலை முடித்தப் பிறகு, மீண்டும் கோப்ரா படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார் விக்ரம்.

 • Share this:
  விக்ரமின் ’கோப்ரா’ படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

  நடிகர் விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. படத்தின் சில பகுதிகளை இன்னும் முடிக்க வேண்டிய நிலையில் விக்ரம் தற்போது மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருக்கிறார். பொன்னியின் செல்வன் ஷெட்யூலை முடித்தப் பிறகு, மீண்டும் கோப்ரா படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார் விக்ரம். இந்நிலையில் தற்போது ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.  இந்த விஷயத்தை படத்தின் மக்கள் தொடர்பாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படத்தில் இர்பான் பதான், மியா, கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், ரோஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

  இதையடுத்து பொன்னியன் செல்வன் படத்தில் நடிக்கும் விக்ரமுடன் இணைந்து, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: