• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: ‘தளபதி 63’ பட தயாரிப்பாளர் உருக்கம்!

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: ‘தளபதி 63’ பட தயாரிப்பாளர் உருக்கம்!

தனது தந்தையுடன் அர்ச்சனா கல்பாத்தி

தனது தந்தையுடன் அர்ச்சனா கல்பாத்தி

இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுகள் குறித்து கருத்து பதிவிட்டுள்ள அரச்சனா கல்பாத்தி,  உண்மையிலேயே நாம் கொடூரமான உலகத்தில் வாழ்கிறோம் என்று கூறியுள்ளார்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறன. இந்நிலையில் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் மற்றும் கொழும்புவின் தெமடாகொடா பகுதி ஆகிய இரண்டு இடங்களில் மீண்டும் குண்டு வெடித்துள்ளது. இதனால் நாடே அச்சத்தில் உறைந்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



    இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள தளபதி 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “அதிர்ச்சியடைந்தேன். உண்மையிலேயே நாம் கொடூரமான உலகத்தில் வாழ்கிறோம். இந்த தாக்குதலில் பிரியமானவர்களை இழந்தவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.



    வீடியோ பார்க்க: இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டு வெடிப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: