ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்! அட்டைப் படத்தை வெளியிட்ட வித்யாபாலன்

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்! அட்டைப் படத்தை வெளியிட்ட வித்யாபாலன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவி

இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய ஸ்டாராக உருவானது எப்படி என்பதை சம்பவங்களின் துணையுடன் விவரித்துள்ளார் சத்யார்த் நாயக்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56-வது பிறந்தநாளான இன்று, அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலின் அட்டைப்படம் வெளியாகியுள்ளது.

  கடந்த ஆண்டு தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி , ஹோட்டல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

  இந்நிலையில் Sridevi: Girl woman Superstar என்ற ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று நூலை சத்யார்த் நாயக் எழுதியுள்ளார்.

  இதன் அட்டைப்படத்தை நடிகை வித்யாபாலன் வெளியிட்டுள்ளார். இந்நூலை பெங்குவின் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் புத்தகத்தை வெளியிட ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அனுமதியளித்துள்ளார். இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய ஸ்டாராக உருவானது எப்படி என்பதை சம்பவங்களின் துணையுடன் விவரித்துள்ளார் சத்யார்த் நாயக்.

  Sridevi: Girl woman Superstar என்ற இந்த நூல் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  வீடியோ பார்க்க: மறக்க முடியாத மயிலு..!

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Sridevi