புதிதாக பிறந்த பெண் குழந்தையை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவி... ரசிகர்கள் வாழ்த்து!

ஸ்ரீதேவி அசோக்

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி தனக்கு பிறந்த பெண் குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் குழந்தையின் படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

 • Share this:
  சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி - அசோக் சிந்தலா தம்பதியருக்கு இந்த மாத துவக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து உற்சாகமாக இருக்கும் இருவரும் தங்கள் பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். புதிதாக பிறந்துள்ள தங்கள் பெண் குழந்தைக்கு ஸ்ரீதேவி - அசோக் சிந்தலா தம்பதியர் சிதாரா ('Sitara') என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தகவலை எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி இன்ஸ்டா வாயிலாக தனது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்களுக்கு தெரிவித்து கொண்டுள்ளார்.

  மேலும் இது குறித்த இன்ஸ்டா போஸ்ட்டில் தனது குழந்தையின் அழகிய வீடியோ காட்சிகளை பின்னணி பாடலுடன் ஷேர் செய்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு"பாடலுடன் தனது குழந்தை தூக்கத்தில் கொடுக்கும் ரியாக்ஷன்களை வீடியோவாக ரெக்கார்ட் செய்து இந்த போஸ்டில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. இதன் மூலம் தனது பெண் குழந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  இந்த போஸ்ட்டில் தனது குழந்தையின் பெயரை "Sitara Chintala" என்று குறிப்பிட்டு இவள் முற்றிலும் அப்பாவின் பெண் ... தோற்றத்தால் மட்டுமல்ல, தூய்மையான இதயத்தாலும் .. என்று நடிகை ஸ்ரீதேவி குறிப்பிட்டுள்ளார். உங்கள் ஆசீர்வாதங்களுக்காக அனைவருக்கும் மிக்க நன்றி ... என்று கூறி உள்ளார். சைந்தவி பிரகாஷ், ஸ்ருதி சண்முகா பிரியா, பவித்ரா ஜனனி, சஞ்சீவ் கார்த்திக் மற்றும் பலர் உள்ளிட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து ஸ்ரீதேவி - அசோக் சிந்தலா ஜோடி மற்றும் புதிய குழந்தைக்காக வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களை பெற்றனர். தவிர ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸ்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.

  Also read... அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்யும் அஞ்சலி - வைரலாகும் புகைப்படங்கள்!

  சின்னத்திரையில் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கர்ப்பமாக இருந்ததால் சீரியல்களில் நடிப்பதற்கு சிறிய பிரேக் விட்டுள்ளார். இவர் சீரியல்களுக்கு வரும் முன் 2004-ல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் செல்வி என்ற கதாபத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன் பின் ஸ்ரீகாந்த் மற்றும் பாவனா நடித்த கிழக்கு கடற்கரை சாலை திரைப்படத்தில் தேவி என்ற கேரக்டரில் நடித்தார்.

  பின் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் 2007-ல் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து வைரநெஞ்சம், இளவரசி, தங்கம், இருமலர்கள், பிரிவோம் சந்திப்போம், கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, சிவசங்கரி, பூவே பூச்சூடவா, கல்யாணம் முதல், காதல் வரை, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அரண்மனை கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் திறம்பட நடித்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: