சச்சின் மீது சர்ச்சை புகார் கூறி வம்புக்கு இழுத்த பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி!

news18
Updated: September 12, 2018, 6:40 PM IST
சச்சின் மீது சர்ச்சை புகார் கூறி வம்புக்கு இழுத்த பாலியல் புகார் நடிகை ஸ்ரீரெட்டி!
சச்சின் டெண்டுல்கர் | ஸ்ரீரெட்டி
news18
Updated: September 12, 2018, 6:40 PM IST
நடிகை ஸ்ரீரெட்டி கிரிக்கெட் வீரர் சச்சின் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக் கருத்தை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு பட உலகில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவிலும் இத்தகைய போக்கு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து முருகதாஸ் , ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீதும் சமீபத்தில் புகார் கூறியிருந்தார்.

தற்போது ஸ்ரீரெட்டியின் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் ரெட்டி டைரி என்ற பெயரில் உருவகி வருகிறது.

தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி விளம்பரம் தேடிக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி தற்போது அதிக இளைஞர்களால் கொண்டாடப்படும் சச்சின் மீது சர்ச்சை கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ``சச்சின் டெண்டுல்கரன் என்ற ஒரு ரொமாண்டிக்கான ஆள், ஹைதராபாத் வந்த போது, "சார்மி’ங்" ஆன பெண்ணை சந்தித்தார். அதற்கு, சாமுண்டேஸ்வர் சாமி என்பவர் உடந்தை" எனத் தெரிவித்துள்ளார்.

சச்சின் மீது ஸ்ரீரெட்டி கூறிய சர்ச்சை கருத்து அவரது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...