பட வாய்ப்பும், அட்வான்ஸும் கொடுத்த ராகவா லாரன்ஸ் - உண்மையை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் படத்தில் நடிக்கவுள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

பட வாய்ப்பும், அட்வான்ஸும் கொடுத்த ராகவா லாரன்ஸ் - உண்மையை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!
ராகவா லாரண்ஸ் | ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: October 17, 2018, 5:54 PM IST
  • Share this:
தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், இயக்குநர் முருகதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பரபரப்பு புகார் கூறினார். இதனிடையே அவருடைய வாழ்க்கை கதை `ரெட்டி டைரி' என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.


இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், “என் நண்பர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கிறேன். லாரன்ஸை அவரது வீட்டில் சந்தித்தேன். என்னை நன்கு உபசரித்தார். அங்கு நிரைய குழந்தைகள் இருந்ததைக் கண்டேன். அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். ஆடிஷனில் கலந்து கொண்டேன். அவருடைய அடுத்த படத்தில் என்னை சேர்த்துக் கொண்டார். நல்ல கதாபாத்திரம் அளிப்பதாக உறுதியளித்தார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் பெற்றுக் கொண்டேன். புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மக்களுக்கு அந்தத் தொகையை அளிக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.



முன்னதாக ராகவா லாரன்ஸ் ஸ்ரீரெட்டி தன் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய் என்று கூறியிருந்தார். மேலும் நான் சொல்லும் காட்சிகளுக்கு நடித்துக்காட்டி தனது நடிப்புத்திறனை நிரூபித்தால் தனது அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு தருகிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
First published: October 17, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading