ஸ்ரீ லீக்ஸ் விவகாரம்: நடிகையை மன்னிப்பு கேட்க சொல்கிறார் நானி

news18
Updated: June 13, 2018, 5:05 PM IST
ஸ்ரீ லீக்ஸ் விவகாரம்: நடிகையை மன்னிப்பு கேட்க சொல்கிறார் நானி
நடிகை நானி மற்றும் ஸ்ரீரெட்டி
news18
Updated: June 13, 2018, 5:05 PM IST
தன்மீது கூறியுள்ள புகாருக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகர் நானி, வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் நடிகைகளுக்கு பட வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டினார்.

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் பட்டியலை நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.  இந்நிலையில், நடிகர் நானி மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளை ஸ்ரீ ரெட்டி கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ ரெட்டியைக் கலந்துகொள்ளவிடாமல் தடுத்ததாகத் தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரமான ஸ்ரீ ரெட்டி, “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்துகொண்டார். என்னை பலவந்தம் செய்யவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுக்கிறார்” என மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ ரெட்டிக்கு நடிகர் நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “என்மீது ஸ்ரீ ரெட்டி அவதூறுகள் பரப்பிவருகிறார். எனது நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்” என்று கூறியுள்ளார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...