கவுதம் கார்த்திக்கு ஜோடியான ஸ்ரீதிவ்யா

கவுதம் கார்த்திக்கு ஜோடியான ஸ்ரீதிவ்யா

கவுதம் கார்த்திக் | ஸ்ரீதிவ்யா

கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரீதிவ்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

  • Share this:
பத்ரி இயக்கத்தில் பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் த்ரில்லர் கலந்த ஆக்‌ஷன் படம் உருவாகி வருகிறது. கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடைசியாக 2017-ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படம் வெளியானது. இதையடுத்து 3 வருட இடைவெளிக்குப் பின் ஸ்ரீதிவ்யா மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா ஹீரோயினாக தேர்வு செய்தது குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில், “இந்தப் படம் த்ரில்லர் கலந்த ஆக்சன் படம் என்றாலும் படத்தின் நாயகி கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். திரைக்கதை முழுதாக எழுதி முடித்தவுடன் நாயகி கதாபாத்திரத்திற்கு நடிகை ஶ்ரீதிவ்யா பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன். இந்தப் படத்தில் அவர் பிஸியோதெரபிஸ்ட்டாக நடிக்கிறார்.” என்றார்.

மேலும் படிக்க: பாலாஜிக்கு இனி பிரச்னையில்லை... பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்

ஏற்கெனவே பத்ரி இயக்கத்தில் பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’ படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இத்திரைப்படத்தில் ரியோ, ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து தனது அடுத்த படைப்பாக கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: