படமா இது.. சார்பட்டா பரம்பரையை புகழ்ந்து தள்ளும் ஸ்ரீசாந்த்!

ஸ்ரீசாந்த் பாராட்டு

நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் உத்வேகம் மற்றும் உந்துதல் தரும் விதமாக திரைப்படம் அமைந்துள்ளது என்று ஸ்ரீசாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சார்பட்டா திரைப்படத்துக்கு  கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில்  ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேற்று முன்தினம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. பலரும் சார்பட்டா திரைப்படத்தை சிறந்த படைப்புகளில் ஒன்றாக கொண்டாடி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆர்யா ஏற்று நடித்துள்ள கபிலன் கதாபாத்திரம் மட்டுமல்லாது, பசுபதி ஏற்று நடித்துள்ள ரங்கன் வாத்தியார், டாடி, டான்சிங் ரோ, வேம்புலி, மாரியம்மாள் போன்ற கதாபாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

  மேலும் படிக்க: சார்பட்டா சொல்லும் அரசியல் என்ன? திமுக, அதிமுக வாதம்!

  திரைபிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் சார்பட்டா திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இன்னாள் நடிகருமான ஸ்ரீசாந்த் சார்பட்டா திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

  இதையும் படிக்க: நெருக்கடி நிலை, கழகம், கலைஞர்: சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!


  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆர்யா சிறப்பாக உழைத்துள்ளார். நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் உத்வேகம் மற்றும் உந்துதல் தரும் விதமாக திரைப்படம் அமைந்துள்ளது.  சிறப்பான நடிப்பு மற்றும் சிறப்பான திரைக்கதை. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.  இந்த திரைப்படத்தை உலகுக்கு தெரியப்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.  தற்போது பட்டா என்னும் திரைப்படத்தில் ஸ்ரீசாந்த் நடிக்கவுள்ளார். அவருடன் சன்னி லியோன் நடிக்கவுள்ளார் . இந்த திரைப்படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
  Published by:Murugesh M
  First published: