முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / முதல்வார இறுதியில் 4,500 கோடிகளை வசூலித்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

முதல்வார இறுதியில் 4,500 கோடிகளை வசூலித்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

ஒரு பில்லியன் டாலர்களை ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் எளிதாக  வசூலிக்கும். இரண்டு பில்லியன்களை தாண்டுமா என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு.

ஒரு பில்லியன் டாலர்களை ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் எளிதாக  வசூலிக்கும். இரண்டு பில்லியன்களை தாண்டுமா என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு.

ஒரு பில்லியன் டாலர்களை ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் எளிதாக  வசூலிக்கும். இரண்டு பில்லியன்களை தாண்டுமா என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு.

  • 1-MIN READ
  • Last Updated :

    கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் வெளியான அனைத்துப் படங்களின் வசூல் சாதனைகளையும் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் முறியடித்துள்ளது. அத்துடன், யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை வெளியான படங்களில் வார இறுதி வசூலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

    ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் சில நாடுகளில் டிசம்பர் 14 ஆம் தேதியும், சில நாடுகளில் 16 ஆம் தேதியும், யுஎஸ், இந்தியா உள்பட பெருவாரியான நாடுகளில் 17 ஆம் தேதியும் வெளியானது. இந்தியாவில் படம் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றது. யுஎஸ்ஸில் முதல் 3 தினங்களில் 260 மில்லியன் டாலர்களை வசூலித்து வார இறுதி வசூலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 357 மில்லியன் டாலர்கள் வசூலுடன் முதல் இடத்தில் அவென்ஜர்ஸ் என்ட்கேம் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த (257.7 மில்லியன் டாலர்கள்) அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தை வீழ்த்தி இந்த சாதனையை ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் படைத்துள்ளது.

    யுஎஸ்ஸுக்கு வெளியே வார இறுதியில் 340.8 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது. மொத்தமாக இதன் முதல்வார இறுதி வசூல் 600.93 மில்லியன் டாலர்கள். நமது ரூபாயில் சுமாராக 4500 கோடிகள். ஒரு பில்லியன் டாலர்களை ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் எளிதாக  வசூலிக்கும். இரண்டு பில்லியன்களை தாண்டுமா என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு.

    மேலும் படிக்க - யுவன் இசையில் ஹீரோவாகும் கோமாளி பட இயக்குநர்!

    யுஎஸ்ஸில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளது. இந்நிலையில் 4336 திரையரங்குகளில் வெளியான படம் யுஎஸ்ஸில் மட்டும் முதல் மூன்று தினங்களில் சுமார் 2,225 கோடிகள் வசூலித்திருப்பது பெரும் சாதனை. படம் அனைத்து வகையிலும் சிறப்பாக இருப்பதால் வசூல் சாதனை தொடர வாய்ப்புள்ளது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published: