கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இசை உலகம் மட்டும் அல்ல 18 இந்திய மொழிகளில் 40,000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாடல்களின் பிரம்மாவாக வாழ்ந்து வருபவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5-ம் தேதியில் இருந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ம் தேதியில் இருந்து மோசம் அடைந்தது.
நுரையீரல் தொற்று கடுமையாக தாக்கி நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்க முடிவெடுத்தனர் மருத்துவர்கள். தொடர்ந்து 8 நாள்களாக செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறது. எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்களுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.