SPB மரணம் தொடர்பாக தனியார் மருத்துவமனை தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினாரா? என்ற கேள்விக்கு எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் உணர்ச்சிப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ‘என் அப்பாவின் இறுதிச் சடங்கிற்கு அஜித் வந்தாலும் வராவிட்டாலும் அது எங்களுக்குகான விஷயம் இல்லை. அவர் அப்பாவின் மீது அன்பு கொண்டவர். அவர், என்னுடைய நண்பர். அவர், வந்தாரா? வரவில்லையா என்பதை என்பது பிரச்னை இல்லை. அவர், எனக்கு போன் செய்து பேசினாரா என்பதெல்லாம் பிரச்னை இல்லை. தற்போது, எனக்கு என் அப்பா இல்லை’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்களுக்கு நன்றி. துக்கத்தில் இருந்து மீள்வதற்குள் ஏராளமான புரளிகள் வருவது வருத்தமாக உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சிரமபட்டதாக ஆதாரமற்ற தகவல் பரப்படுகின்றது.
சிகிச்சைக்கான பணம் வேண்டாம் என்றது மருத்துவமனை.
இன்சுரன்ஸ் தொகை மட்டுமே மருத்துவமனை பெற்றது. எஸ்.பி.பி மீதுள்ள அன்பால் மற்றவர் மீது பழிப்போட நினைப்பது வேண்டாம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவிடத்திற்கு வருவோருக்கு ஏற்பாடுகளை செய்து தர பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுள்ளோம்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீது மரியாதை உள்ளது, போல் சிறிது காலம் எங்களையும் விடுங்கள். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது இதுதான் அப்பாவின் மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்’ என்றார்.
தொடர் செயற்கை சுவாசம் கொடுக்க முடியாததால் டிரக்யாஸ்டமி செய்யப்பட்டதாகவும் சிகிச்சை செய்யும் முன் சரணிடம் அனுமதி பெற்றோம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் டிரக்யாஸ்டமி சிகிச்சை தொண்டை பகுதியில் செய்யும் சிகிச்சை இதனால் எஸ்.பி.பியால் தற்காலிகமாக பேசமுடியாமல் போகலாம். அதனல் வெளியே சொல்ல வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
டிரக்யாஸ்டமி சிகிச்சை செய்யப்பட்டதாக சொன்னால் இனி அவரால் பாட முடியாதா என்று மக்களிடம் அச்சம் வரும். அதனால் வெளியே சொல்லவில்லை என்று சரன் தெரிவித்தார்.