SP Balasubramaniyam சிறப்பு வார்டு: எக்மோ சிகிச்சை - எஸ்.பி.பிக்கு அளிக்கப்படும் சிசிச்சை என்ன?

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அதற்காக எக்மோ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது என்று தகவல்கள் வந்துள்ளன.

SP Balasubramaniyam  சிறப்பு வார்டு: எக்மோ சிகிச்சை - எஸ்.பி.பிக்கு அளிக்கப்படும் சிசிச்சை என்ன?
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • Share this:
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து செயற்கை சுவாச முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்தநிலையில், இன்று மதியம் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அளித்த விளக்கத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளது. செய்ற்கை சுவாச சிகிச்சையில் இருந்துவருகிறார். அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ’எஸ்.பி.பியின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் அதற்காக எக்மோ சிகிச்சையும் தொடர்ந்து வருகின்றது. நீண்ட நாள் சிகிச்சை தேவை என்பதால் மூன்றாவது மாடியில் உள்ள MICU தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி, தற்போது அவருக்காக பிரத்யேகமாக மருத்துவமனையின் ஆறாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.



எஸ்.பி.பியின் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் Vitals சீராக இருந்ததாலும் செயற்கை சுவாசம் கொடுக்கும் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் தான் உள்ளார்’ என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
First published: August 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading