தனக்காக பிரார்த்தனை செய்ய ரசிகர்களிடம் கேட்ட சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா - என்ன காரணம்?

சௌந்தர்யா

சிங்கரில் பாடலுடன் சேர்த்து நடிப்புத்திறனையும் சௌந்தர்யா வெளிப்படுத்தி இருந்தார். இதை அடுத்து 2016-ஆம் ஆண்டில், பகல் நிலவு டிவி சீரியலில் முன்னணி நடிகைகளில் ஒருவராக அறிமுகமானார்.

  • Share this:
விஜய் டிவி-யின் பல்வேறு ஷோக்களுக்கும் ஏராளமான தீவிர ரசிகர்கள் உலகளவில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் மிகவும் புகழ்பெற்ற மெகா ஹிட் ஷோவாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. பாடகர்களின் பன்முக திறமையை மேடை போட்டு காட்டி தமிழ் திரைக்கு மட்டுமின்றி உலகளவில் இருக்கும் இசை பிரியர்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளது விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. கடந்த 2010-ம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் போட்டியாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் சௌந்தர்யா. விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் சீனியரீல் போட்டியாளராக கலந்து கொண்ட சௌந்தர்யா, பின்னாளில் அதே சேனலில் ஒளிபரப்பான ஹிட் சீரியலான பகல் நிலவில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

அதன் பின் வெள்ளித்திரையில் சில படங்களில் பாட்டு பாடி மற்றும் நடித்த சௌந்தர்யா, ஷார்ட் ஃபிலிம் படங்களிலும் நடித்து கலக்கி உள்ளார். இவர் விக்னேஷ் கார்த்தியுடன் நடித்துள்ள ஷாட் ஃப்லிம்கள் இணையத்தில் நல்ல வைரலானதால் நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்தார் சௌந்தர்யா. நடிகர் ஷ்யாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் திரைப்படத்தின் மூலம் வெள்ளிதிரையில் பாடகியாக அறிமுகமானார் சூப்பர் சிங்கர் புகழ் சௌந்தர்யா. 2017-ம் ஆண்டு வெளிவந்த கொடிவீரன் படத்திலும் பாடியுள்ளார். பாடகியாக பயணிக்க நினைத்த இவருக்கு நடிப்பிற்கான வாய்ப்புகள் கதவை தட்டின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூப்பர் சிங்கரில் பாடலுடன் சேர்த்து நடிப்புத்திறனையும் சௌந்தர்யா வெளிப்படுத்தி இருந்தார். இதை அடுத்து 2016-ஆம் ஆண்டில், பகல் நிலவு டிவி சீரியலில் முன்னணி நடிகைகளில் ஒருவராக அறிமுகமானார். ரேவதி கார்த்திக் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். சுப்பர் சிங்கர் 3 மற்றும் 4-ல் பங்கேற்றிருந்த சௌந்தர்யா, சூப்பர் சிங்கர் 5 மினி சீரிஸிலும் பங்கேற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான கபாலியில் பப் சிங்கராகவும், நடிகர் விஜய் நடித்த மாஸ்டரில் காலேஜ் ஸ்டாஃபாகவும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான வணக்கம் டா மாப்ள திரைப்படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும் சௌந்தர்யா நடித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ன் இறுதி நாளில் விருந்தினராகவும் நடிகையும், பாடகியுமான சௌந்தர்யா பங்கேற்றார்.

Also read... குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் - வெளியானது முதல் ப்ரோமோ!

துவக்கத்தில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் சௌந்தர்யா. அதன் பின் தான் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. சூப்பர் சிங்கர் சீசன்களில் போட்டியாளராக பங்கேற்ற சௌந்தர்யா, டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மற்ற பிரபலங்களை போலவே இவரும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.இந்நிலையில் சௌந்தர்யா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன உடல்நல குறைவு ஏற்பட்டது என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் கடுமையான குடல் அழற்சி (acute appendicitis) காரணமாக தனக்கு கடந்த சனிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் சௌந்தர்யா பதிவிட்டுள்ளார்.முழுவதும் குணமடைய சில நாட்கள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ள சௌந்தர்யா, தனக்காக பிரார்த்தித்து கொள்ளுமாறு ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: