இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவல் மெல்போர்ன் 2021-ல் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் நடிகர் சூர்யா!

சூர்யா

சிறந்த நடிகர் என்ற விருது வாங்கிய நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கும், சூரரை பொற்று இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் நன்றி தெரிவித்தார்.

  • Share this:
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா (IFFM) அதன் 12-வது பதிப்புக்கான வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. இந்த ஆண்டின் விருதுக்கான பட்டியல் இந்தியா முழுவதும் வெளியான சிறந்த படங்கள் மற்றும் குறும்படங்களின் வரிசையைக் கொண்டிருந்தது. இது சினிமா மூலம் பன்முகத்தன்மையின் கருப்பொருளைக் குறிக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு அனுராக் காஷ்யப், ஷூஜித் சிர்கார், தியாகராஜன் குமாரராஜா, ஸ்ரீராம் ராகவன் போன்ற இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் தொகுப்பாளர்களாக இருந்தனர். ரிச்சா சாத்தா, குணீத் மோங்கா, ஓனிர், ஆஸ்திரேலிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜெஃப்ரி ரைட் மற்றும் ஆஸ்கார் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர் ஜில் பில்காக் உள்ளிட்ட நடுவர் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் விருதுகளை வென்றுள்ளனர். ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு பன்முகத்தன்மை விருது வழங்கி IFFM கவுரவித்தது. இந்த விருதினை லாட்ரோப் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கியது. மேலும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி என்னவென்றால், தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது. அதே படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர ஷெர்னி திரைப்படத்திற்காக வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

அதே நேரத்தில் மிர்சாபூருக்கு சிறந்த சீரிஸ் விருது வழங்கப்பட்டது. திரைப்பட இயக்குநர் அனுராக் பாசு லுடோ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதினை வென்றார். இதுதவிர மனோஜ் பாஜ்பாய் மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் பேமிலி மேன் 2 சீரிஸில் தங்கள் கதாபாத்திரங்களுக்காக விருதுகளை வென்றனர். மலையாளத் திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சனும் இந்த விழாவில் அங்கீகரிக்கப்பட்டது.

விழாவின் இயக்குனர் மிது பவுமிக் லாங்கே வெற்றியாளர்களைப் பற்றி பேசுகையில், “உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களால் விரும்பப்பட்ட சிறந்த திரைப்படங்களை உருவாக்கிய அனைத்து வெற்றியாளர்களையும் அவர்களின் குழுக்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம். நாம் சினிமா மற்றும் சினிமா பற்றிய உரையாடல்களை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவை முக்கிய மற்றும் சார்பற்றவை அல்ல. பலவிதமான உணர்திறன்களை விவரிக்கும் நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிறந்த நடிகர் என்ற விருது வாங்கிய நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கும், சூரரை பொற்று இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது , "அனைத்து கலைஞர்களும் தங்களால் முடிந்ததை வழங்கியுள்ளனர் என்று நான் நம்புகிறேன். இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த படத்திற்காக நான் பெறும் முதல் விருது இது. எங்களுக்கு மிகுந்த அன்பை அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. என் இயக்குனர் சுதாவுக்கு நன்றி. இந்த படம் அவருடைய 10 வருட கனவு. இந்த கதையை எழுதுவதற்கு நான்கு ஆண்டுகள் செலவிட்டார். மாறாவின் கதாபாத்திரம் அவர் இல்லாமல் இருந்திருக்காது" என்று பேசினார்.

இதையடுத்து சிறந்த நடிகைக்கான விருது பெற்ற வித்யா பாலன் கூறியதாவது, தொற்றுநோய்களின் போது படமாக்கப்பட்ட ஷெர்னி படத்திற்கு விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார். இந்த நிச்சயமற்ற நேரங்களில் இந்த படத்தை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்த எனது இயக்குனர் அமித் மசூர்கர் மற்றும் எனது தயாரிப்பாளர் அபுந்தன்டியாவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

Also read... எதற்கும் துணிந்தவன் எப்போது நிறைவடையும்? - சூப்பர் அப்டேட்!

டைனரிட்டி-இன் சினிமா விருதை வென்றபோது, ​​பங்கஜ் திரிபாதி கூறியதாவது, "இந்த விருது எனக்கு சிறப்பு வாய்ந்தது. நான் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். அது உண்மையில் எனக்கு ஊக்கமளிக்கிறது. இந்த விருது எனக்கு கிடைக்க அனுராக் தான் காரணம். அவர்தான் எனது திறமையை கண்டுபிடித்தார். எனவே அனுராக் காஷ்யப் அவர்களுக்கு நன்றி. அவர்தான் எனது திறமையை மீண்டும் கண்டுபிடித்தார். என்னுடைய அனைத்து இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நான் அவர்களின் திட்டங்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் 2021 இந்திய திரைப்பட விழாவில் விருதினை வென்ற நடிகர்கள் மற்றும் படங்களின் முழு பட்டியல்:

* சிறந்த திரைப்படம் - சூரரை போற்று

* சிறந்த நடிகர் - சூர்யா சிவகுமார் (படம்: சூரரை போற்று)

* சிறந்த நடிகை - வித்யா பாலன் (படம்: ஷெர்னி) மற்றும் நிமிஷா சஜயன் ( படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன்)

* சிறந்த இயக்குனர் - அனுராக் பாசு (படம்: லுடோ) & பிருத்வி கோனனூர் (படம்: பிங்கி எல்லி)

* சிறந்த சீரிஸ் - மிர்சாபூர் சீசன் 2

* சீரிஸின் சிறந்த நடிகை - சமந்தா அக்கினேனி (சீரிஸ்: பேமிலி மேன் 2)

* சீரிஸின் சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (பேமிலி மேன் 2)

* ஈகுவாலிட்டி இன் சினிமா (குறும்படம்) - ஷீர் கோர்மா

* ஈகுவாலிட்டி இன் சினிமா அவார்ட் (திரைப்படம்) - தி கிரேட் இந்தியன் கிச்சன்

* சிறந்த இண்டி படம் - பையர் இன் தி மவுண்டைன்

* சினிமாவில் பன்முகத்தன்மை விருது - பங்கஜ் திரிபாதி

* டிஸ்ரப்டர் விருது - சனல்குமார் சசிதரன்

* சிறந்த ஆவணப்படம் - ஷட் அப் சோனா
Published by:Vinothini Aandisamy
First published: