Home /News /entertainment /

சூரரைப் போற்று படத்தின் ‘மண்ணுருண்ட’ பாடல் ரிலீஸ்!

சூரரைப் போற்று படத்தின் ‘மண்ணுருண்ட’ பாடல் ரிலீஸ்!

சூரரைப் போற்று படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் தீம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண்ணுருண்ட’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏகாதேசி எழுதியுள்ள இந்தப் பாடலை நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் பாடியுள்ளார். மரண ஊர்வலத்தின் போது பாடப்படும் குத்துப் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Soorarai Pottru

அடுத்த செய்தி