'தனுஷ் 43’ படத்தில் சூரரைப் போற்று பிரபலம்!

நடிகர் தனுஷ்

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

 • Share this:
  கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் அடுத்தப் படத்தில் சூரரைப் போற்று பிரபலம் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

  துருவங்கள் 16, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய, கார்த்திக் நரேன் தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

   

  Soorarai Pottru Krishna Kumar in D43

  இந்நிலையில் தனுஷ் 43 படத்தில் நடிக்க நடிகர் கிருஷ்ணகுமார் ஒப்பந்தமாகியிருப்பதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் சே என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றவர்.

  தனுஷ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற தான் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக, கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: